கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகளை ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் இரண்டு ஆண்டாக ஆய்வு செய்து இந்த குற்றச்சாட்டை நாங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அதோடு பங்குச்சந்தையிலும் முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலமே தம் நிறுவனப் பங்குகள் விலை அதானி குழுமம் அதிகரித்துள்ளது என்றும் தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
அதேபோல் கரீபியன் நாடுகள், மோரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை அதானி நடத்தி வருகிறார். அரசாங்கம் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் உதவியுடனே அந்த மோசடிகள் நடந்துள்ளது என பகிரங்கமாகவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7 நிறுவனங்களில் பங்குகள் மூன்று ஆண்டுகளில் 819% உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அதிகமான கடனை பெற்றுள்ளன. இந்த 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களில் விகிதங்கள் 1%க்கும் கீழே உள்ளது. இதனால் பணப்புழக்க அழுத்தத்தைச் சந்தித்துள்ளது.
அதானி குழுமம் பணமோசடி, வரி செலுத்துவோர் நிதி திருட்டு, பங்குச்சந்தை மோசடி என 17 பில்லியன் டாலர்கள் வரை மோடி செய்துள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவை சந்தித்தன. இதன் காரணமாக அதானி நிறுவனத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் சரிவை சந்தித்துள்ளது. இதனால் அதானி உலக பணக்காரர் வரிசையில் 3-வது இடத்தில் இருந்து 25-வது இடத்துக்கும் கீழே சரிந்துள்ளார். அவரது சொத்துமதிப்பு 3.9 லட்சம் கோடி சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சரிவு பல நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதானியின் இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அதற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக நாடாளுமன்றமே ஒத்திவைக்கப்படும் நிலை கூட உருவானது. ஆனால், அத்தகைய நிலையில் கூட அதானி மீதான விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. அதிலும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி தனது நண்பர் அதானி குறித்து ஒரு இடத்தில் கூட வாய்திறக்கவில்லை.
இந்த நிலையில், தனது நண்பர் அதானியின் வளர்ச்சிக்கு இந்திய பிரதமராக இருக்கும் மோடி எப்படி எல்லாம் பங்காற்றினால் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் புகரிப்படத்தின் படி, அதானிக்கு மோடி பெற்றுக்கொடுத்த பல திட்டங்கள் வெளிவந்துள்ளன.
மோடியால் அதானிக்கு கிடைத்த திட்டங்கள் :
பாகிஸ்தான் மின் உற்பத்தி நிலையம் - மதிப்பு 25,000 கோடி,
இஸ்ரேல் ஆளில்லா விமானம் -மதிப்பு 1500 கோடி,
சீனாவில் 36 ஒப்பந்தங்கள் - மதிப்பு 14,800 கோடி,
ஸ்வீடன் ஒற்றை இஞ்சின் போர்விமானம் -மதிப்பு 60,000 கோடி,
ஆஸ்திரேலியா நிலக்கரி உற்பத்தி -மதிப்பு 6200 கோடி,
மலேசியாவில் துறைமுக விரிவாக்கம் - மதிப்பு 2,15,000 கோடி,
வங்காளதேசத்தில் மின் உற்பத்தி நிலையம் - மதிப்பு 10,000 கோடி,
ஈரானின் சபார் துறைமுகம் -மதிப்பு 4000 கோடி,
மியன்மரில் மின்சார விற்பனை -மதிப்பு 3200கோடி,
இந்த வகையில் மட்டுமே மொத்தம் 3 லட்சத்து 39 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான வெளிநாட்டுக்கு திட்டங்களை மோடி அதானிக்கு பெற்றுத்தந்துள்ளார்.
இதுதவிர உள்நாட்டில் நிலக்கரியில் இருந்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் வரை அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் மோடி அதானிக்கே வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.