அரசியல்

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !

சென்னையை பொறுத்த வரையில் முதல்வருக்கு பிடித்தமானது என்பதால் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் KN நேரு தெரிவித்துள்ளார்.

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல்வேறு நல திட்டங்கள் அறிவித்து வருகிறது. அதில் ஒன்று தான் 'சிங்கார சென்னை 2.O' திட்டம். சென்னை மாநகராட்சியை அனைத்து வசதிகளிலும் மேம்படுத்த சிங்கார சென்னை 2.0 திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பசுமை சென்னை, தூய்மை சென்னை, நட்புமிகு சென்னை, சீர் மிகு சென்னை, நீர்மிகு சென்னை, எழில் மிகு சென்னை, நலமிகு சென்னை, பாதுகாப்பான சென்னை, கல்வியில் சென்னை என பல்வேறு திட்டங்கள் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் கூட கல்விக்காக 'மாதிரி பள்ளிகள்' தொடங்கப்பட்டது.

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !

குறிப்பாக பசுமை சென்னை, தூய்மை சென்னை உள்ளிட்ட முயற்சிகள் மூலம் சென்னை மாநகராட்சியை அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் மழை நீர் வடிகால் பணியும் தீவிரமாக நடந்து வந்தது. பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. ஆனால் இந்த பருவமழை தொடங்குவதற்கு முன்பே வடிகால் பணிகள் வெகுவாக நடந்து வந்தது.

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !

இது குறித்து நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பிரத்யேக பேட்டியில், "சென்னையில் மழை நீர் தேங்குவது ஏன் என்று முதலமைச்சர் யோசித்து, அதனை சரி செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டதால் தான் மழை நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

இது மட்டுமல்லாமல், மாம்பலம், புளியந்தோப்பு போன்ற இடங்களில் சரியான தூர்வாரும் பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து முதலமைச்சர் கடந்த ஆண்டு வெள்ள நீர் தேங்கியது போல், இனி தேங்க கூடாது என்று முடிவெடுத்ததோடு அதற்காக திருப்பூர் கலெக்டர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து எங்கெல்லாம், ஏன் வெள்ளம் தேங்குகிறது என்று கண்டறிய நியமிக்கப்பட்டது.

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !

அதன்படி அந்த கமிட்டியும் ஒரு அறிக்கை கொடுத்ததன் பேரில், முதலமைச்சர் இந்த வடிகால் பணிகளுக்காக தனியாக நிதியும் ஒதுக்கினார். தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திரமடைந்த இந்த 75 ஆண்டுகாலத்தில் சென்னையில் இது போன்ற முயற்சி முதல் முறையாகும். முதலமைச்சர் எண்ணம் என்னவென்றால், இனி மழைக்காலம் என்றும் வந்தால் சென்னையில் எங்கும் தண்ணீர் தேங்கி நிற்க கூடாது.

முக்கியமாக கூவம், அடையாறு, பாக்கிக்காம் கேனல் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்து, தூர்வாரி, அனைத்து இடங்களில் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதே. தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலை காரணமாக பொதுமக்கள் அவதி படலாம். நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், அவர்கள் தற்காலிகமாக இதனை தாங்கிக்கொள்ள வேண்டும்.

அன்று நடவடிக்கை.. இன்று பலன்..4 மாதங்களில் திமுக அரசு செய்தது என்ன? - பட்டியலிட்ட அமைச்சர் கே.என்.நேரு !

இந்த பணிகளுக்காக 900 கோடிக்கு மேலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில் முதல்வருக்கு பிடித்தமான பகுதி என்பதால் அதனை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார்" என்றார்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதற்கான ஆயத்த பணிகள் முன்பே நடந்த நிலையில், தற்போது கனமழையை சென்னை எதிர்கொண்டு வருகிறது. இந்த மழைக்கான வடிகால் பணிகள் நடைபெற்றதால் தற்போது சாலையில் இருந்த வெள்ளநீர் முழுமையாக வடிந்து காணப்படுகிறது. பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories