தமிழ்நாடு

12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!

சென்னையில் கடந்த 12 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதாதல் பொதுமக்கள் திமுக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் கால்வாய்களை முறையாக தூர்வாராததால் எப்போது மழை பெய்தாலும் சென்னை மக்களுக்குப் பிரச்சனையாகவே இருந்து.

குறிப்பாகச் சென்னையில் உள்ள சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும். இதனால் வேலைக்குச் செல்பவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது.

12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!

இதையடுத்து சென்னை முழுவதும் முதற்கட்டமாக வடிகால் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் கண்டறியும் பணிகளும் நடைபெற்றது.

பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வடிகால் வாய்களும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தூர்வாரப்பட்டது. அதேபோல் அனைத்து தெருக்களிலிருந்த கால்வாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது.

12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!
12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!

இந்த பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாகச் சென்று அடிக்கடி ஆய்வு செய்து வந்தார். இப்படி முதலமைச்சரின் மேற்பார்வையில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் விரைந்து நடைபெற்றதால் சென்னையில் கடந்த 12 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நேற்று மாலை 7 மணி முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்துவரும் நிலையில் சென்னையில் முக்கிய சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.

12 மணிநேர கனமழைக்குப் பிறகும் தண்ணீர் தேங்கல : இதுதான் ‘சிங்கார சென்னை’.. திமுக அரசை பாராட்டும் மக்கள்!

குறிப்பாகக் கடந்த ஆண்டு சென்னையின் முக்கிய15 சுரங்கப்பாதைகளிலும் வாகனங்கள் செல்லாத வகையில் தண்ணீர் தேங்கியது. ஆனால் இந்த முறை தண்ணீர் எந்த இடத்திலும் தேங்கி நிற்கவில்லை. மழைநீர் படிப்படியாக வடிந்துள்ளது. இதனால் மக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மட்டுமில்லை அது விபத்துகளும் மழை நீர் வடிகால் பணிகள் நடந்ததால் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

நேற்றிலிருந்தே மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் இது தான் உண்மையான சிக்கார சென்னை என தி.மு.க அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை மாநகராட்சி ஊழியர்களும், அரசும் சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories