அரசியல்

“இந்தி திணிப்பு - ஆங்கிலத்தை வெறுக்க வேண்டாம்..” : அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுத்த “தி இந்து’’ நாளேடு!

“தி இந்து’’ ஆங்கில நாளேடு இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

“இந்தி திணிப்பு - ஆங்கிலத்தை வெறுக்க வேண்டாம்..” : அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுத்த “தி இந்து’’ நாளேடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தி இந்து’’ ஆங்கில நாளேடு இந்தி மொழியைத் திணிக்கும் வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இணைக்கும் மொழியான ஆங்கிலத்தை வெறுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்துள்ளது.

இதுகுறித்து “தி இந்து’’ஆங்கில நாளேட்டின் நேற்றைய (11.4.2022) இதழில் “மொழிக்கு தடை இல்லை!’’ என்றத் தலைப்பிலும் “இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மக்களைக் கொண்ட மாநிலங்கள் ஆங்கிலத்தைத் தங்களுடைய இணைப்பு மொழியாகக் கொள்ளும் சுதந்திரத்தைப் பெற்றிருக்க வேண்டும்’’ என்ற துணைத் தலைப்பிலும் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியிருப் பதாவது:-

“இந்தி பேசாத பகுதிகள் அல்லது மாநிலங்களில் வசிக்கும் மக்களின் தொடர்பு மொழியாக இந்தியை ஆக்க வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு முற்றிலும் தேவையற்றதாகும். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில், அவர் கடமை அடிப்படையில் இந்தி மொழியை மேம்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் பொறுப்பை பெற்றி ருக்கிறார். ஆனால் கடந்த வாரம் புதுடெல்லியில் நடைபெற்ற அந்தக் குழுவின் 37வது கூட்டத்தில் அவருடைய பேச்சு உருவாக்கிய உணர்வு அவர் அந்த மொழியைத் திணிக்க விரும்புகிறார்

என்பதாகும். இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் மக்கள் இடையே இந்திய மொழி ஒன்று பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தி மொழிக்கு மாற்றாக - உள்ளூர் மொழிக்கு மாற்றாக அல்ல - இந்தி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். இரண்டு மொழிகளில் எது தங்களுடைய தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது இந்தி அல்லாத மொழிகளைப் பேசும் பகுதிகளின் அல்லது மாநிலங்களின் மக்களின் முடிவைப்பொறுத்ததாகும் அவர்களுக்கு ஆங்கிலம் வசதியானதாக (ஆறுதல் அளிக்கக்கூடியதாக) இருந்தால், உலக மொழியாகவும் இருக்கும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். அதில் அறிவுரை சொல்வதற்கோ, ஆங்கிலத்தைக் கைவிடும்படி கூறுவதற்கோ வேறு இந்திய மொழியையோ, இந்தியையோ ஏற்றுக்கொள்ளச் சொல்வதற்கோ இந்தப் பிரச்சினையில் செய்யப்பட்டது போல எந்த வேலையும் இல்லை.

அமித்ஷாவின் கருத்து ஆங்கிலம் ஓர் இந்திய மொழி இல்லை என்ற அடிப்படை யில் எழுப்பப்பட்டிருக்கலாம். அவர் அறிந்து கொள்ளத்தவறியது என்ன வென்றால் ஆங்கிலமும், தமிழைப்போல, தெலுங்கைப் போல, இந்தியைப் போல இந்திய மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இந்த அங்கீகாரம் நாட்டில் இலக்கிய விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சாகித்ய அகாடமியாலேயும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கலாச்சார அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இந்தஅகாடமியால் வருடாந்திர சிறந்த நூல்களுக்கான விருதுகளை மற்றவற்றோடு உண்மையில் இந்திய எழுத்தாளர்களால் எழுதப்பட்ட ஆங்கிலப் படைப்புகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இது ஆங்கில மொழி இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புகள் அன்னியில் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்யதாகும். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே. சிவகுமார் சுட்டிக் காட்டியிருப்பதைப்போல, பெங்களூரு இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலை நகராக மாறியிருப்பது ஆங்கிலத்தில்தான்.

எனவே ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆங்கிலத்தின் மீது கொண்ட எந்த வெறுப்பையும் அகற்றுவது பொருத்தமானதாகும். இந்த மொழி (ஆங்கிலம்) விரிவான இணைக்கும் சக்தியாக இந்தியா போன்ற வேறுபட்ட சமுதாயங்களைக் கொண்டுள்ள நாட்டில் திகழ்கிறது.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, அமித்ஷாவின் அறிவிப்பு அரசியல் ரீதியில் கடுமை யாகக் கண்டிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகளால் அது கண்டிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுடன் நட்புறவான கட்சியான அ.தி.மு.க. கூட அதன் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் “இந்தித் திணிப்பை’’ ஒரு போதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், இருந்தது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சரியாக, அமித்ஷாவின் “ஒற்றை அடையாளத்தை”க் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் மு.க.ஸ்டாலின் அவர்கள் இது ஒற்றுமையை ஏற்படுத்தாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே வளர்க்கப்பட வேண்டும். மேம்படுத்தப்பட வேண்டும் என்பது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

அந்த மொழிகள் அனைத்துமே அந்தந்த மாநிலங்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய சொற்களை பொருளுள்ள வகையில் இந்த திசையை நோக்கி செயல்படுத்த வேண்டும். ஆனால் அதே நேரத்தில் அத்தகைய மேம்பாட்டு நடவடிக்கை ஆங்கிலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகிறது என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்து விடக்கூடாது.

பல்வேறு கலாச்சாரங்களையும், பன்முகத்தன்மை அடையாளத்தையும் மதிப்பது அரசியல் வகுப்புக்கு குறிப்பாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு அவசியம் ஆகும். அமித்ஷா அத்தகைய தேவையற்ற வெறுப்பை கைவிடும் மனநிலையை சொற்கள் மூலமும், செயல்கள் மூலமும் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவர். இவ்வாறு “தி இந்து’’ ஆங்கில நாளேடு தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது

banner

Related Stories

Related Stories