அரசியல்

க்ரீன்வேஸ் சாலை வீட்டில் டெண்டர் விட டிஸ்கஸ் நடத்திய SP வேலுமணி & கோ - FIRல் உள்ள முக்கிய தகவல்கள் இதோ!

லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரின் சோதனை பிடியில் சிக்கியுள்ள எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் முறைகேடுகள் குறித்து FIRல் குறிப்பிட்டுள்ளதன் விவரம்.

க்ரீன்வேஸ் சாலை வீட்டில்  டெண்டர் விட டிஸ்கஸ் நடத்திய SP வேலுமணி & கோ - FIRல் உள்ள முக்கிய தகவல்கள் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள சில முக்கியமான விஷயங்கள் குறித்த விவரம் பின்வருமாறு:-

2014 - 2018 முதல் தற்போது சோதனையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒரே இணையதள இணைப்பை பயன்படுத்தி ஒரு கம்ப்யூட்டர் மூலமாக டெண்டர்களை கோரி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2014 - 2017 முதல் கோவை மாநகராட்சி தொடர்பான 47 டெண்டர்களை எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் எடுத்தது தெரியவந்துள்ளது. இந்த டெண்டர்கள் அனைத்துமே ஒரே செல்போன் இணைப்பு மூலமாகவும் ஒரே இணையதள இணைப்பு மூலமாகவும் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2015 2017 கேசிபி நிறுவனமும் ராபர்ட் ராஜா என்ற நிறுவனமும் கோவை மாநகராட்சியில் தொடர்பாக 14 டெண்டர்களை எடுத்தது தெரிய வந்துள்ளது. இதில் கேசிபி நிறுவனத்தில் பங்குதாரராக ராபர்ட் ராஜா உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு மிக நெருக்கமான சந்திரசேகர் அவருடைய கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து கொண்டே டெண்டர்களை யாருக்கு விடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் சந்திரசேகர் அமைச்சரின் இல்லத்துக்கே சென்று யாருக்கு டெண்டர் விடுவது என்பது குறித்தும் ஆலோசனை ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories