முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து சர்ச்சைக்கு பெயர் போனவர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை புகழ்ந்து பேசியது, பாகிஸ்தான் ராணுவ அதிகாரியோடு கைகுளுக்கியது என இவர் ஏதோ ஒரு விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கும்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் நிச்சயம் ராகுல் காந்தி வெற்றி பெறுவார், இல்லையெனில் பதவியை ராஜினாமா செய்ய தயார், இல்லையேல் தன் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தனக்குண்டான் பாணியில் சவால் விட்டார் சித்து.
ஆனால், நிலைமையோ தலைகீழாக மாறி அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.கவின் ஸ்மிருதி இராணி வெற்றி பெற்றார். இதனையடுத்து ”பதவியை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்கள் சித்து” என குறிப்பிட்டு பா.ஜ.கவினர் போஸ்டர்கள் ஒட்ட தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார் சித்து.
இந்த நிலையில், இன்று ட்விட்டரில் பதிவிட்டிருந்த நவ்ஜோத் சிங் சித்து, கடந்த ஜூன் 10ம் தேதியே தான் ராஜினாமா செய்ய போவதாக ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியதாகவும், விரைவில் ராஜினாமா கடிதத்தை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிடம் அளிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.