அ.ம.மு.க-வில் தினகரனுக்கு பக்கபலமாக இருந்துவந்த தங்கதமிழ்செல்வன், தினகரன் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தினகரனின் உதவியாளருக்கு போன் செய்து தினகரனைக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், “தங்க தமிழ்செல்வனை கட்சியிலிருந்து நீக்குவதில் எந்தத் தயக்கமும், அச்சமும் இல்லை. மேலும்,“தங்கதமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்க முடியாது. விரைவில் புதிய கொள்கை பரப்புச் செயலாளர் யாரென அறிவிக்கப்படும்.” எனத் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், தனியார் தொலைக்காட்சிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, "தினகரன் தவறாகப் பேசுகிறார், இதுபோன்று பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல.
நான் அமைதியாக இருப்பேன், என்னை குறித்து பேச ஆரம்பித்தால், நான் பல விஷயங்களை பேசிவிடுவேன். என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை, நான் வளர்ந்து வருவதால் என் மீது அவருக்கு பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்” என்றார்.