அரசியல்

வாக்கு எண்ணிக்கை 4 மணி நிலவரம் ; தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி முகம் !

மதியம் 3 மணி நிலவரப்படி இந்திய அளவில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

anna arivalayam
twitter anna arivalayam
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மக்களவை தேர்தல் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், மதியம் 4 மணி நிலவரப்படி,

குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் 29,198 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் வெற்றிமுகம் காண்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

நீலகிரி (தனி) தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா 1,81,703 வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

தேனி, ஜந்தாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 20,406 வாக்குகள் பெற்று முன்னிலை.

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் 1.54.754 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை

பெரம்பூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் நிறுத்தம்.

banner

Related Stories

Related Stories