அரசியல்

“இந்தியாவின் பெட்ரோலை உறிஞ்சிவிட்டு என்ஜினை நிறுத்திவிட்டார் மோடி” - ராகுல் காந்தி பேச்சு!

மக்களவைத் தேர்தலையொட்டி தேனியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தலையொட்டி தேனியில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

அப்போது, “பூட்டிய அறைக்குள் தயாரிக்கப்பட்டது அல்ல காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை லட்சக்கணக்கான மக்கள் பாராட்டுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

மேலும், “ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 72,000 பணம் வழங்குவதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். மோடி, மக்களின் கையில் இருக்கும் பணத்தை வங்கியில் போடச்சொல்லிக் கட்டாயப்படுத்தி அந்தப் பணத்தைப் பிடுங்கிக் கொண்டார். உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு வரிகளை வசூலித்து தனது நெருங்கிய நண்பர்களான நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா போன்றோரின் பாக்கெட்டில் சேர்த்தது தான் மோடியின் சாதனை. ” என்றார்.

“இந்தியாவின் பெட்ரோலை உறிஞ்சிவிட்டு என்ஜினை நிறுத்திவிட்டார் மோடி” - ராகுல் காந்தி பேச்சு!

“மக்களிடம் வாங்கும் சக்தியைக் குறைத்து, தொழிற்சாலைகளை மந்தப்படுத்தி, வேலைவாய்ப்பைக் குறைத்து மொத்தமாக நாட்டையே குட்டிச்சுவராக்கி விட்டார் நரேந்திர மோடி. மோடி செய்த அத்தனை நடவடிக்கைகளும் எதிர்மறையாகத் தான் திரும்பியிருக்கின்றன.

இந்தியா எனும் வாகனத்திலிருந்து பெட்ரோலை முழுமையாக எடுத்துவிட்டு என்ஜினை நிறுத்திவிட்டார் மோடி. வாகனத்தின் சாவியைத் தூக்கி 15 பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார் மோடி.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். மோடி ஒருவரைத் தவிர.” என மோடியை விமர்சித்தார் ராகுல்.

“இந்தியாவின் பெட்ரோலை உறிஞ்சிவிட்டு என்ஜினை நிறுத்திவிட்டார் மோடி” - ராகுல் காந்தி பேச்சு!

“வெறுப்பு அரசியலை நடத்துவதுதான் நரேந்திர மோடியின் சித்தாந்தம். அன்பை உள்ளடக்கிய அரசியலை நடத்துவதே காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வின் கொள்கை.

பெரியார், கலைஞர் புத்தகங்களை பிரதமர் மோடி படிக்கவேண்டும். அவற்றை நான் மோடிக்குப் பரிசளிக்கவேண்டும்.” என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories