அரசியல்

தமிழகத்திற்கு நீட் தேர்வு ரத்து-காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 

2019 மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று வெளியிட்டாா். 

Congress Manifesto 
Congress Manifesto 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019 மக்களவைத் தோ்தல் வருகின்ற 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் 54 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவா் ராகுல் காந்தி இன்று காலை வெளியிட்டாா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் அமைச்சா்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி ஆகியோா் முன்னிலையில் அறிக்கை வெளியிடப்பட்டது

Rahul Gandhi
Rahul Gandhi

அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி,தேர்தல் அறிக்கையில் ஒரு வாக்குறுதி கூட பொய்யாக இருக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். இந்த அறிக்கை 5 முக்கிய அம்சங்களை மைமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

  • தமிழகம் உள்பட நீட் தோ்வை எதிா்க்கும் மாநிலங்களுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
  • புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்
  • தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும்; வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்
  • தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்றாக மாநில அளவில் தேர்வு நடத்தப்படும்
  • மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள்
  • விரைவில் நிரப்பப்படும்
  • விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
  • குறைந்தபட்ச வருவாய் திட்டம் மூலம் ஏழைக்குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்
  • 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.
  • விவசாயத்துறைக்கு தனி அமைச்சகம் ஒதுக்கீடு செய்யப்படும்.
  • கிராமப்புற இளைஞகா்கள் ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்களுக்கு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
  • புதிதாக தொழில் தொடங்குபவா்கள் 3 ஆண்டுகள் உரிமம் பெறத் தேவையில்லை.
  • ரபேல் ஒப்பந்தம் தொடா்பாக முறையான விசாரணை நடத்தப்படும்.
  • இலங்கையுடனான மீனவா்களின் பிரச்சினை தீா்க்கப்படும்.
  • ஜிஎஸ்டி கவுன்சில் குழு போன்று விவசாயம், கல்வி, சுகாதார மேம்பாட்டிற்கு மாநில அமைச்சா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
  • அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
banner

Related Stories

Related Stories