முரசொலி தலையங்கம்

அரசு ஊழியர்களை அவமானப்படுத்திய அதிமுக அரசு : இதனை யாரும் மறக்கமாட்டார்கள் - முரசொலி தாக்கு !

அரசு ஊழியர்களை அவமானப்படுத்திய அதிமுக அரசு : இதனை யாரும் மறக்கமாட்டார்கள் - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கள் (11-04-2024)

அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார் ?

இன்­றைக்கு அரசு ஊழி­யர்­கள் மீது கரி­ச­னம் உள்­ள­வ­ரைப் போலக் காட்­டிக் கொள்­ளும் எடப்­பாடி பழ­னி­சா­மி­தான், தன் கையில் அதி­கா­ரம் இருந்­த­போது அரசு ஊழி­யர்­களை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­வர் என்­பதை அரசு ஊழி­யர்­கள் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

‘‘அரசு ஊழி­யர்­கள் நல்லா சிந்­தித்­துப் பாருங்க. இன்று ஆரம்­பப் பள்­ளி­யில் ஹெட் மாஸ்­டர்­க­ளாக இருப்­ப­வர்­க­ளுக்கு எவ்­வ­ளவு சம்­ப­ளம் தெரி­யுமா? 82 ஆயி­ரம் ரூபாய். ஐந்­தாம் கிளாஸ் ஹெட் மாஸ்­ட­ருக்கு 82 ஆயி­ரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்­டப்­பட்டு படித்து, பத்து வரு­டம் கழிந்­தா­லும் 50 ஆயி­ரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்­டான். அதே­போல் ஆசி­ரி­யர்­க­ளுக்கு 160 நாள் லீவு கிடைக்­கி­றது. எட்­டாம் வகுப்பு வரை படித்­தா­லும் சரி, படிக்­கா­விட்­டா­லும் சரி, பாஸ், பெயிலே கிடை­யாது. அப்­ப­டியே விட்­ரு­வான். இவ்­வ­ளவு பணத்­தை­யும் வாங்­கிக் கொண்டு போராட்­டம் நடத்து­கின்­ற­னர்’’ என்று முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது பேசி­ய­வர்­தான் பழ­னி­சாமி.

அரசு ஊழி­யர்­க­ளுக்­கும், ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் அள­வுக்கு அதிகமாக ஊதி­யம் வழங்­கப்­ப­டு­கி­றது, அதை வாங்­கிக் கொண்டு ஒழுங்­காக வேலை செய்­யா­மல், போராட்­டத்­துக்கு மேல் போராட்­டங்­கள் நடத்தி வரு­கின்­ற­னர் -– என்று முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் போது சொன்­ன­வர்­தான் பழ­னி­சாமி.

பேசி­யது மட்­டு­மல்ல, விளம்­ப­ரம் வெளி­யிட்டு அரசு ஊழி­யர் போராட்­டத்­தைக் கேவ­லப்­ப­டுத்­தி­ய­வர் பழ­னி­சாமி. 2019-–-ல் ஜாக்டோ – ஜியோ நடத்­திய போராட்­டத்தை ஒடுக்க அர­சுப் பணத்­தைத் தண்­ணீ­ரா­கச் செல­வ­ழித்­தார்­கள்.

பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி 2019 பிப்­ர­வ­ரி­யில் தமி­ழ­கம் முழு­வ­தும் 10 லட்­சம் அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் வேலை­நி­றுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆசி­ரி­யர்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­ற­தால் அர­சுப் பள்­ளி­கள் இயங்­க­வில்லை. போராட்­டத்­தில் ஈடு­பட்ட ஆசி­ரி­யர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர். அந்­தப் போராட்­டத்தை ஒடுக்க எடப்­பாடி பழ­னி­சாமி­யின் அ.தி.மு.க. அரசு பல முயற்­சி­களை எடுத்­தது. பல இடங்­க­ளில் போராட்­டத்தை ஒடுக்க மறை­மு­க­மாக பழ­னி­சாமி அரசு கள­மி­றங்­கி­யது.

அரசு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் தரப்­ப­டும் சம்­ப­ளம் எவ்­வ­ளவு என்­கிற விவ­ரத்தை அனைத்து மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கங்­க­ளி­லும் கட் அவுட் போல வைத்து அரசு ஊழி­யர்­களை அசிங்­கப்­ப­டுத்­தி­னார்­கள். இதற்­கா­கக் கோடிக் கணக்­கில் அரசு பணம் செல­வ­ழிக்­கப்­பட்­டது. போராட்­டம் உச்­சத்­தில் இருந்த ஜன­வரி 27–-ம் தேதி அனைத்து நாளி­தழ்­களி­லும் முக்­கால் பக்­கத்­துக்கு விளம்­ப­ரம் வெளி­யிட்­டது பழ­னி­சாமி அரசு.

‘அர­சால் செயல்­ப­டுத்த முடி­யாத கோரிக்­கை­களை வலி­யு­றுத்­திப் போராட்­டத்­தில் ஈடு­பட வேண்­டாம்’ என­வும், ‘உட­ன­டி­யாக பணிக்­குத் திரும்­ப­வும் அரசு ஊழி­யர்­க­ளுக்­கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் மாண்­பு­மிகு மீன் வளம் மற்­றும் பணி­யா­ளர் நிர்­வா­கச் சீர்­தி­ருத்­தத் துறை அமைச்­சர் அவர்­க­ளின் வேண்­டு­கோள்’ என்ற தலைப்­பிட்டு நீண்ட விளக்­கத்தை அந்த விளம்­ப­ரத்­தில் அளித்­தார்­கள். ‘பிற தனி­யார் நிறு­வ­னத்­தைக் காட்­டி­லும் அதி­கச் சம்­ப­ளத்தை அரசு ஊழி­யர்­கள் பெறு­கின்­ற­னர்’ எனச் சொல்லி அரசு ஊழி­யர்­க­ளின் சம்­பள விகி­தத்­தை­யும் அதில் குறிப்­பிட்­டி­ருந்­தார்­கள்.

அரசு ஊழியர்களை அவமானப்படுத்திய அதிமுக அரசு : இதனை யாரும் மறக்கமாட்டார்கள் - முரசொலி தாக்கு !

‘அலு­வ­லக உத­வி­யா­ள­ருக்கு 28,560 ரூபாய் சம்­ப­ள­மும் ஓட்­டு­நருக்கு 35,400 ரூபாய் சம்­ப­ள­மும் கண்­கா­ணிப்­பா­ள­ருக்கு 66,840 ரூபாய் சம்­ப­ள­மும் தரப்­ப­டு­வ­தா­கச் சொன்­னது அரசு. தலை­மைச் செய­ல­கத்தில் பணி­யாற்­றும் உத­வி­யா­ள­ருக்கு 36,360 ரூபா­யும் இணைச் செய­லா­ள­ருக்கு 2,23,920 சம்­ப­ள­மும் தரப்­ப­டு­கி­றது எனச் சொன்­னது அந்த விளம்­ப­ரம். முது­நிலை ஆசி­ரி­ய­ருக்கு 66,840 ரூபா­யும் மேல்­நி­லைப் பள்ளி தலை­மை­யா­சி­ரி­ய­ருக்கு 1,03,320 ரூபா­யும் சம்­ப­ளம் அளிக்­கப்­ப­டு­கி­றது’ என அந்த விளம்­ப­ரத்­தில் குறிப்­பிட்டு இருந்­தார்­கள்.

அந்த விளம்­ப­ரம் வெளி­யிட்­ட­தின் நோக்­கம் தனி­யா­ரை­விட அரசு ஊழி­யர்­கள் அதி­கச் சம்­ப­ளம் வாங்­கு­கி­றார்­கள், அவர்­க­ளுக்கு எதற்­குப் போராட்­டம் என்­ப­து­தான். இந்த விளம்­ப­ரத்தை அனைத்து நாளி­தழ்­க­ளி­லும் அனைத்­துப் பதிப்­பு­க­ளி­லும் வெளி­யி­டு­வ­தற்­காக 50 லட்­சம் ரூபா­யைச்செல­வ­ழித்­த­னர். இப்­ப­டித்­தான் அர­சுப் போக்­கு­வ­ரத்து ஊழி­யர்­கள் வேலை நிறுத்­தத்­தில் ஈடு­பட்­ட­போது இதே­போல விளம்­ப­ரம் வெளி­யிட்­டது பழ­னி­சாமி அரசு. அர­சுப் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 13-–வது ஊதிய ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் தீர்­மா­னிக்­கப்­பட்ட ஊதிய உயர்வு விவ­ரங்­க­ளைத் தமிழ் நாளி­தழ்­க­ளில் விளம்­ப­ரம் வெளி­யிடு­வ­தற்­காக 46,54,361 ரூபாய் தரப்­பட்­டது.

“மாண­வர்­க­ளின் கல்­விக்­கும், மக்­கள் பணிக்­கும் இடை­யூறு ஏற்­ப­டுத்­தும் போராட்­டங்­க­ளைக் கைவிட்டு பணிக்­குத் திரும்ப வேண்­டும், தொடர்ந்து பணிக்­குச் செல்­லா­மல் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மீது துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று விளம்­ப­ரம் கொடுத்து மிரட்­டி­யது பழ­னி­சாமி அரசு. இதை எல்­லாம் இன்­றைய தினம் அரசு ஊழி­யர்­கள் மறந்­தி­ருப்­பார்­கள் என்று நினைத்­துப் பேசிக் கொண்­டி­ருக்­கிறார் பழ­னி­சாமி.

அரசு ஊழி­யர்­கள் ஆசி­ரி­யர்­க­ளின் பழைய ஓய்­வூ­திய திட்­டத்தை ரத்து செய்து புதிய பங்­க­ளிப்பு ஓய்­வூ­திய திட்­டத்தை 2003 ஆம் ஆண்டு ஏப்­ரல் 1ம் தேதி நடை­மு­றைப்­ப­டுத்தி செயல்­ப­டுத்­தி­யது அப்­போ­தைய அ.தி.மு.க. அரசு தான். அப்­போ­தும் அரசு ஊழி­யர்­கள் போரா­டி­னார்­கள். அவர்­களை அழைத்­துப் பேசா­மல் மிரட்­டி­யது அ.தி.மு.க. அரசு. அடக்­கு­மு­றையை கட்­ட­விழ்த்­து­விட்டு காவல்­து­றையை ஏவி 1லட்­சத்து 50 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் மீது வழக்­கு­கள் தொடர்ந்து சிறை­யில் அடைத்­தது அ.தி.மு.க. அரசு. துறை ரீதி­யான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொண்டு அனை­வ­ரை­யும் பணி இடை­நீக்­கம் செய்­தது அ.தி.மு.க. அரசு. தொகுப்­பூ­தி­யத்­துக்கு ஆட்­களை நிய­மித்­தார்­கள். இவர்­க­ளுக்கு கால­முறை ஊதி­யத்­தைக் கொடுத்­த­வர் 2006ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள்.

2019ஆம் ஆண்டு போராட்­டத்­தில் ஈடு­பட்ட ஐந்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட அரசு ஊழி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் மீது வழக்­குத் தொடர்ந்து சிறை­யில் அடைத்து துறை ரீதி­யான நட­வ­டிக்கை எடுத்­தார் பழ­னி­சாமி. பணி­யிடை நீக்­கம் செய்­தும் பணி­யிட மாற்­றம் செய்­தும் பந்­தா­டி­னார் பழ­னி­சாமி. இந்த நட­வ­டிக்­கை­கள் அனைத்­தை­யும் ரத்து செய்­த­வர் இன்­றைய முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­கள். இவை அனைத்­தை­யும் அரசு ஊழி­யர்­கள் மறந்­தி­ருப்­பார்­கள் என்று நினைத்து புலம்­பிக் கொண்டு இருக்­கி­றார் பழ­னி­சாமி.

எம்.ஜி.ஆர். ஆட்சி, ஜெய­ல­லிதா ஆட்சி, பழ­னி­சாமி ஆகிய மூன்று அ.தி.மு.க. ஆட்­சி­க­ளும் அரசு ஊழி­யர்­களை அடக்­கு­மு­றை­யால் துன்­பு­றுத்­திய ஆட்­சி­கள் என்­பதை அவர்­கள் மறக்க மாட்­டார்­கள்.

banner

Related Stories

Related Stories