முரசொலி தலையங்கம்

போதைக்கு எதி­ரான போராட்­டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!

போதைக்கு எதி­ரான போராட்­டத்­தை­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி இருக்­கி­றார்­கள். போதை இல்­லாத மாநி­ல­மாக தமிழ்நாடு உரு­வா­கட்­டும்!

போதைக்கு எதி­ரான போராட்­டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர்  வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட 13, 2022) தலையங்கம் வருமாறு:

போதைக்கு எதி­ரான போராட்­டத்­தில் மும்­மு­ர­மாக இறங்கி இருக்கி­றது தமிழ்­நாடு அரசு. போதை விழிப்­பு­ணர்வு உறுதிமொழியை சுமார் 35 லட்­சம் பேர் நேற்­றைய தினம் மட்­டும் எடுத்­துக் கொண்­டுள்­ளார்­கள். அர­சுத் துறை­கள் தொடங்கி கல்லூ­ரி­கள், பள்­ளி­கள் வரை இதன் கொடூ­ரம் உணர்த்தபபட்டுள்ளது.

விழிப்பு உணர்வை ஊட்­டு­வ­தற்கு முன்­ன­தாக மாவட்ட ஆட்­சி­யர், காவல் துறை கண்­கா­ணிப்­பா­ளர்­களை அழைத்­துப் பேசி­னார் தமிழ்­நாடு முத­ல­ மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். அப்­போது போதை மருந்து நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் முடுக்­கி­விட்­டார்.

குஜ­ராத், மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் இருந்து வரும் தகவல்களைவிட தமி­ழ­கத் தக­வல்­கள் அதிர்ச்சி ஊட்­டு­பவை அல்ல. கடந்த ஓராண்டு காலத்­தில் 41 ஆயி­ரத்து 625 பேரைக் கைது செய்­துள்­ளது காவல்­துறை. போதை வியா­பா­ரி­க­ளின் 50 கோடி ரூபாய் மதிப்­பி­லான சொத்­துக்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. ஆனால் குஜ­ராத், மகா­ராஷ்­டிரா நில­வ­ரங்­கள் பகீர் ரகம்.

போதைக்கு எதி­ரான போராட்­டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர்  வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!

2017 - முதல் இன்­று­வரை குஜ­ராத் துறை­மு­கங்­க­ளில் கைப்பற்றப்பட்ட போதை மருந்­து­க­ளின் மதிப்பே பல்­லா­யி­ரம் கோடி ஆகும். குஜ­ராத் மாநில கடற்­ப­கு­தி­யில், ஒரு கப்­ப­லில் இருந்து 1,500 கிலோ ஹெரா­யினை இந்­திய கட­லோ­ரக் காவல் படை அதி­கா­ரி­கள் 2017 ஆம் ஆண்டு கைப்­பற்­றி­னார்­கள். ஒரு வணி­கக் கப்­ப­லில் இருந்து கைப்­பற்­றப்­பட்ட இந்த ஹெரா­யி­னின் மதிப்பு கிட்­டத்­தட்ட 550 மில்­லி­யன் டாலர் இருக்­கும் என கடலோரக் காவல் படை அறிக்­கையே வெளி­யிட்­டது. ‘’இவ்­வ­ளவு போதைப் பொருள்­கள் ஒரே நேரத்­தில் பறி­மு­தல் செய்யப்பட்டிருப்­பது இதுவே முதல்­முறை” என்று கடற்­படை செய்­தித் தொடர்­பா­ளர் டி.கே.சர்மா சொன்னார்.

ஹெரா­யி­னின் முக்­கிய மூலப்­பொ­ரு­ளாக ஓபி­யம் உள்­ளது. உலகின் மிகப்­பெ­ரிய ஓபி­யம் உற்­பத்­தி­யா­ளர்­க­ளால் ஆப்கானிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­விற்­குள் குஜ­ராத் வழி­யாக வருகிறது. ஆப்­கா­னிஸ்­தா­னில் தயா­ரா­கும் ஹெரா­யின்­கள், இந்தி­யப் பெருங்­க­டல் வழி­யாக கிழக்கு மற்­றும் தெற்கு ஆப்ரிக்கா­வுக்­குக் கடத்­தப்­ப­டு­வ­தாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்­றும் குற்­றம் தொடர்­பான அலு­வ­ல­கம் கூறு­கி­றது. வட மாநி­ல­மான பஞ்­சாப், ஹெரா­யி­னால் கடு­மை­யான பாதிப்­பு­க­ளைச் சந்­தித்து வரு­கி­றது.

2021 ஆம் ஆண்டு குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள முந்­திரா துறைமுகத்­துக்கு 21 ஆயி­ரம் கோடி மதிப்­புள்ள போதைப் பொருள் வந்து இறங்­கி­யது.

இந்த ஆண்­டின் தொடக்­கத்­தில் மிகப்­பெ­ரிய போதைப் புதையலை குஜ­ராத் காவல்­து­றை­யி­னர் பிடித்­தார்­கள். அவர்­கள் நடத்­திய சோத­னை­யில் குஜ­ராத் கடற்­க­ரைக்கு அருகே கடத்­தல் படகு பிடி­பட்­டது. அதில், சாக்­குப் பைக­ளில் வைக்­கப்­பட்­டி­ருந்த கஞ்சா, மெத்­தாம்­பி­ட­மைன் மற்­றும் ஹெரா­யின் போன்ற போதைப் பொருட்­கள் 760 கிலோ கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. இதன் சர்­வ­தேச மார்க்­கெட் விலை ரூ.2,000 கோடி. அண்டை நாட்­டில் இருந்து செயல்­ப­டும் போதை கடத்­தல் கும்­பல், இந்­தியா மற்­றும் பிற நாடு­க­ளுக்கு கடல் மார்க்­க­மாக போதைப் பொருட்­களை சப்ளை செய்து வரு­கின்­றது என்று அறி­யப்­பட்­டது.

சமீப கால­மாக குஜ­ராத் துறை­மு­கங்­க­ளைப் பயன்­ப­டுத்தி போதைப் பொருள்­கள் கடத்­தப்­ப­டும் சம்­ப­வங்­கள் அதிகரித்துள்ளது. இது­கு­றித்து காங்­கி­ரஸ் முன்­னாள் தலை­வர் ராகுல்­காந்தி, வெளி­யிட்­டுள்ள ‘ட்விட்­டர்’ பதி­வில்;

“குஜ­ராத்­தில் பல கோடி ரூபாய் மதிப்­புள்ள போதைப் பொருள்­கள் அங்கு தொடர்ந்து மீட்­கப்­பட்டு வரு­கின்­றன. கண்­மூ­டித்­த­ன­மாக போதைப் பொருள் வியா­பா­ரம் செய்­யும் இவர்­கள் யார்? இந்த மாஃபி­யாக்­க­ளுக்கு எந்த ஆளும் சக்­தி­கள் பாது­காப்பு கொடுக்கிறார்­கள்?’’ என கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

போதைக்கு எதி­ரான போராட்­டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர்  வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!

கடந்த வாரம் மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தில் 2988 கிலோ போதை மருந்து பிடி­பட்­டுள்­ளது. கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் மட்­டும் வடமா­நி­லங்­க­ளில் 300 சத­வி­கி­தம் அதி­க­ரித்­துள்­ளது.

இத்­த­கைய மோச­மான நிலைமை தமிழ்­நாட்­டில் இல்லை என்றாலும், முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக போதை மருந்து தடுப்பு, -விழிப்பு உணர்வு ஆகிய நட­வ­டிக்­கை­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் முடுக்கி விட்­டுள்­ளார்­கள்.

உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆற்­றிய உரை­யில் ..

எனது காவல் நிலைய எல்­லை­யில் போதை மருந்து விற்­ப­னையை முற்­றி­லு­மா­கத் தடை செய்து விட்­டேன் என்று ஒவ்­வொரு போலீஸ் இன்ஸ்­பெக்­ட­ரும் உறுதி எடுத்­துக் கொண்­டால் நிச்­ச­ய­மாக போதை நட­மாட முடி­யாது.

கஞ்சா விளை­விப்­பதை முற்­றி­லு­மா­கத் தடுத்­தாக வேண்­டும்.

மலை­ய­டி­வா­ரங்­க­ளைக் கண்­கா­ணித்­தாக வேண்­டும்.

அண்டை மாநி­லங்­க­ளில் இருந்து கடத்தி வரு­வ­தைத் தடுத்­தாக வேண்­டும்.

எல்லை மாவட்­டங்­க­ளின் சோத­னைச் சாவ­டி­களை அதி­கப்­ப­டுத்த வேண்­டும்.

கட­லோர மாவட்­டங்­க­ளில் கண்­கா­ணிப்பை அதி­கப்­ப­டுத்த வேண்­டும்.

காவல் துறை­யி­ன­ரின் ரோந்து அதி­க­ரிக்க வேண்­டும்.

அனைத்­துத் துறை­க­ளும் ஒருங்­கி­ணைந்து செயல்­பட வேண்­டும்.

போதைப் பொருள்­கள் அதி­கம் விற்­ப­னை­யா­கும் இடங்­களை நிரந்­த­ர­மா­கக் கண்­கா­ணிக்க வேண்­டும்.

பள்ளி, கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு அரு­கில் விற்­கப்­ப­டு­வ­தைத் தடுக்க வேண்­டும் – என்று உத்­த­ர­விட்­டுள்­ளார் முத­ல­மைச்­சர்.

போதைக்கு எதி­ரான போராட்­டம் .. இளைய சமுதாயத்தின் மீது முதலமைச்சர்  வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடு!

தமிழ்­நாடு அரசு இது­தொ­டர்­பான சட்­டங்­க­ளைக் கடு­மை­யாக்க இருக்­கி­றது. சிறப்பு நீதி­மன்­றங்­களை அதி­க­ரிக்­கப் போகி­றோம் என்று சொல்லி இருக்­கி­றார் முத­ல­மைச்­சர். போதை மருந்து விற்ப­வர்­க­ளது சொத்­துக்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட இருக்­கி­றது, இதற்­காக ‘சைபர் செல்’ உரு­வாக்­கப்­பட உள்­ளது, போதைப் பொருள் தடுப்­புப் பிரி­விற்கு என்று தனி­யாக ஒரு “இன்­டெ­லி­ஜென்ஸ் செல்” ஏற்­ப­டுத்­தப்­பட இருக்­கி­றது என்­றும் அறி­வித்து இருக்­கி­றார்.

தமிழ்­நாட்டு இளைய சமு­தா­யத்­தின் மீது முத­ல­மைச்­சர் அவர்­கள் வைத்­தி­ருக்­கும் அக்­க­றை­யின் வெளிப்­பாடு இது.

இல்­லம் தேடி கல்வி, கல்­லூ­ரிக் கனவு, காலைச் சிற்­றுண்டி, நான் முதல்­வன் என்­பது போன்ற திட்­டங்­கள் பள்ளி, கல்­லூரி மாண­வச் சமு­தா­யத்தை வளர்த்­தெ­டுக்­கும் முத­ல­மைச்­ச­ரின்

கன­வுத் திட்­டங்­க­ளா­கும். அதே­நே­ரத்­தில் தவ­றான பாதை­யில் அவர்­கள் செல்­லா­மல் தடுத்­தாக வேண்­டும் என்­ப­தற்­காக போதைக்கு எதி­ரான போராட்­டத்­தை­யும் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி இருக்­கி­றார்­கள். போதை இல்­லாத மாநி­ல­மாக தமிழ்நாடு உரு­வா­கட்­டும்!

banner

Related Stories

Related Stories