முரசொலி தலையங்கம்

’முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த மகுடம்’.. தலைமை நீதிபதியின் தலைசிறந்த பாராட்டு: முரசொலி பெருமிதம்!

கடந்த பதினோரு மாதகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகளுக்கும் உழைப்புக்கும், செயல்பாட்டுக்கும் உச்சநீதிமன்றமே வழங்கிய பாராட்டுப் பத்திரம்தான் இது.

’முதல்வரின் உழைப்புக்கு கிடைத்த மகுடம்’.. தலைமை நீதிபதியின் தலைசிறந்த பாராட்டு: முரசொலி பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.26 2022) தலையங்கம் வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியும், அதில் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட பாராட்டும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்ய வேண்டியவை ஆகும். நீதித்துறையில் இருப்பவர்களின் பாராட்டு என்பது மிகச் சாதாரணமாகக் கிடைத்து விடுவது இல்லை. இன்னும் சொன்னால் நீதிபதிகள் வெளிப்படையான பாராட்டுகளைப்பொதுமேடைகளில் வெளிப்படுத்தும் சூழ்நிலைகள் அமைவதும் இல்லை. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய நீதித்துறையின் மிக

உயர்ந்த பொறுப்பில் - அதாவது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா அவர்கள் பாராட்டிய பாராட்டு என்பது இதுவரைகிடைத்த பாராட்டுக்களில் தலையாய பாராட்டு ஆகும். தலைசிறந்த பாராட்டு ஆகும்.

''I appreciate the efforts of the Government of Tamil Nadu for extending a helping hand for the cause of lawyers.

I would like to compliment the Chief Minister, who is working hard for the bright future of the state.

Chief Justice Mr. Bhandari informs me, that the Chief Minister and the government are extremely co-operative in his efforts to strengthen the judiciary” என்பதுதான் மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்களின் பாராட்டு ஆகும்.

“தமிழ்நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்காக முதலமைச்சர் அவர்கள் மிகக் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்”என்று பாராட்டி இருப்பவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் என்.வி.ரமணா அவர்கள். கடந்த பதினோரு மாதகாலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றி வரும் பணிகளுக்கும் உழைப்புக்கும், செயல்பாட்டுக்கும் உச்சநீதிமன்றமே வழங்கிய பாராட்டுப் பத்திரம்தான் இது.

“தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுவதாகவும், அதன் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பண்டாரி அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்” என்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதாவது உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர் அவர்களும், உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களும் முதலமைச்சர் குறித்து எவ்வளவு உயர்வாக தங்களுக்குள் பேசிக் கொண்டுள்ளார்கள் என்பது இதன் மூலமாகத் தெரிய வந்துள்ளது.

அதே விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று முக்கியமான கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்கள் முன்னால் வைத்தார்கள்.

* உச்சநீதிமன்ற,உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.

* தமிழ் மொழியினையும் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.

* பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் - என்பதுதான் முதலமைச்சர் அவர்கள் வைத்த கோரிக்கைகள் ஆகும். இவை மூன்றுக்கும் அதே மேடையில் உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்கள் பதில் அளித்ததுதான் முதலமைச்சருக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.

* That social representation should definitely be considered while appointing judges. (நீதிபதிகளை நியமிக்கும்போது சமூகப் பிரதிநிதித்துவம் நிச்சயமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்)

* That there is already a private member Bill for the establish- ment of Regional Benches of Supreme Court introduced by MP P. Wilson & Union Government should take a call on it. (உச்சநீதி மன்றத்தின் மண்டல அளவிலான கிளைகளை அமைப்பது குறித்து ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் அவர்களால் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவு செய்யும்)

* It is important that regional languages are made languages of the court because the litigant must understand the process of ad- ministration of justice. It should not be like chanting of mantra that no one understands. (எவருக்கும் புரியாத வகையில் மந்திரம் உச்சரிப்பதைப் போன்று இல்லாமல், வழக்காடுபவர்கள் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை புரிந்து கொள்ளும் வகையில் நீதி மன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் ஆக்கப்பட வேண்டியது அவசியம்)

- இவைதான் முதலமைச்சர் அவர்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அளித்த பதில்கள் ஆகும். இவை பதில்கள் மட்டுமல்ல, முதலமைச்சர் அவர்களின் சிந்தனைதான் உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் இருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

“உயர் நீதிமன்றம் மற்றும் நீதிமன்றங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் உள்ள நிலத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு” என்று பாராட்டு தெரிவித்துள்ளார் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி அவர்கள்.அதாவது உச்சநீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் ஒருசேர இணைந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப் போற்றி உள்ளது.

உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது, கட்சி எல்லைகளைக் கடந்து, மாநில எல்லைகளைக் கடந்து, அரசியல் எல்லைகளைக் கடந்து பாராட்டப்படுவதுதான் பெருமகிழ்ச்சிக்குரியது!

banner

Related Stories

Related Stories