முரசொலி தலையங்கம்

“நாளை ஏப்ரல் 6; தமிழக மக்கள் அனுமதிக்காக தி.மு.க கடமையாற்ற காத்திருக்கிறது” : முரசொலி தலையங்கம் !

நாளை ஏப்ரல் - 6; தமிழக மக்கள் வாக்களித்து தமிழ்நாட்டை ஆள அனுமதிக்கும் நாள்! மக்கள் அனுமதிக்காக தி.மு.க. கடமையாற்ற காத்திருக்கிறது.

“நாளை ஏப்ரல் 6; தமிழக மக்கள் அனுமதிக்காக தி.மு.க கடமையாற்ற காத்திருக்கிறது” : முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாளை வாக்குப் பதிவு நாள். வாக்குச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவுகள் நடைபெற இருக்கின்றன. அதாவது, பதிவு நேரம் கூடுதலாக்கப்பட்டு இருக்கிறது. இக்கடைசி கட்ட முயற்சியில் தான் நமது பணியின் மொத்த சக்தியும் திரண்டு நிற்கிறது.

‘ஈடு நமக்குச் சொல்ல ஒருவரும் இங்கில்லையே’ என்னும் நிலை நமக்கு நன்றாகப் புலனாகிறது. இருப்பினும் நாம் ஒவ்வொருவரும் ‘குழந்தை பிறக்கும் வேளை நெருங்க நெருங்கத் தாயின் கூச்சல் அதிகமாகத்தான் இருக்கும்’ என்பதைப் போல நமது கழகத் தோழர்களின் நிலையும் - நினைப்பும் நம் ஒவ்வொருவருக்கும் அப்படி இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொண்டு வெற்றியை ஈட்ட வேண்டும்.

அந்தப் படபடப்புக் கடைசி கட்டத்தில் கடுமையான சுறுசுறுப்பாக மாற வேண்டிய கட்டத்தில் நாம், நாளை களத்தில் இருக்கப் போகின்றோம். இந்த நேரத்தில் நாம் சில்லறைகளில் - சின்ன சின்ன சச்சரவுகளில் சிந்தனையை செலவிடக்கூடாது. பதிவுக்காக வழங்கப்பட்டு இருக்கும் 12 மணி நேரத்தையும் பொன்னே போல் கருதப்பட்டு நமது அணிவகுப்பு இடையறாது நடந்து கொண்டே இருக்க வேண்டும். நேற்று மாலை 7 மணியோடு பரப்புரை ஓய்ந்தது.nஎல்லாத் தரப்பினர் கருத்துகளையும் வாக்காளர்கள் உள்வாங்கி மனத்திடைவைத்து சிந்தனை செய்ய இன்று அவர்களுக்கு முழுவாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

“நாளை ஏப்ரல் 6; தமிழக மக்கள் அனுமதிக்காக தி.மு.க கடமையாற்ற காத்திருக்கிறது” : முரசொலி தலையங்கம் !
Kalaignar TV

உறுதியான வாக்குகள் இயக்கத்தின் மூலக் கொள்கைகளுக்கு உறுதி செய்யப்பட்டவையாகும். இதுவன்றி, அப்போதைக்கு அப்போது தோன்றும் அரசியல் நியாயங்களுக்காக வாக்களிக்கிற மக்கள் இம்முறை நமக்கே அளிக்கிற முழுவாய்ப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் அ.இ.அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியாகும். அதைப்பற்றி நாம் நாளேடுகளில் முழுப்பக்கம் விளம்பரங்களை மிகச் சிறப்பான முறையில் தந்து விளம்பரப்படுத்தி இருந்தோம்.

அந்த விளம்பரத்தில் 15 அம்சங்கள் தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான அ.தி.மு.க - பா.ஜ.க. ஆட்சிகளின் அலங்கோல கருத்துக்கள் சித்தரிக்கப்பட்டு இருந்தன. எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து, ‘ஆதிக்க சக்திகளும் அடிமைகளும் காணும் தொலைநோக்கு தமிழ்நாடு பாரீர்’ என அவ்விளம்பரத்திற்குத் தலைப்பிட்டு இருந்தது. இதிலிருந்து நம் எதிரணியினர் என்ன நோக்கத்தை மக்களிடம் பரப்பி வெற்றி பெற நினைக்கிறார்கள் என்பதை நமது வாக்காளப் பெருமக்களுக்கு நாம் நினைவூட்ட கடமைப்பட்டு இருக்கின்றோம். நாம் வெளியிட்டுள்ள 15 அம்சங்களில் முக்கியமான ஒன்றைப் பற்றி நாம் இந்த நேரத்தில் தெரிவிப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மார்ச் 31ஆம் தேதி விருதுநகர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு பரப்புரைச் செய்ய வருகை தந்தார். அதற்காக விளம்பரம் ஒன்று ‘வாட்ஸ் அப்பில்’ வெளியிடப்படுகிறது. தமிழக பா.ஜ.க அதனை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு தொகுதிகளுக்கு பரப்புரைச் செய்ய சந்நியாசி ஆதித்யநாத் வருவதை ‘தக்ஷிண பிரதேச சட்டமன்றத் தேர்தல் பரப்புரை’ என்று அந்த விளம்பரம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

இது எப்படிச் சரியாகும்? ஏற்புடைய விளம்பரமாகும்? சட்டப்படி எதிரானது அல்லவா? தமிழ்நாட்டிற்கு ‘தக்ஷிண பிரதேசம்’ எனும் பெயரினை இப்போது மாற்றியவர்கள் யார்? ஏன் தமிழ்நாடு என்று விளம்பரத்தில் வெளியிடவில்லை பா.ஜ.க.வினர்! பா.ஜ.க.வினர் நினைப்பு என்னவாக இருக்கிறது என்பது நமக்கு விளங்கிவிட்டது. இவர்கள் ‘தமிழ்நாடு’ எனும் பெயரைத் ‘தக்ஷிணபிரதேசம்’ எனும் மாற்றும் திட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத் தமிழ்நாட்டினர் தேர்ந்தெடுக்கலாமா? அவர்களுக்குத் துணைபோகிற அ.இ.அ.தி.மு.க. வினரை

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருவரைக்கூட தமிழ்நாட்டவர்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம். ஒரு காலத்தில் இந்தியாவில் மொழிவழி மாநிலங்களுக்கு எதிராக ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அதில் இந்தியாவை ஐந்தாகப் பிரிப்பது என்றும், தென் மாநிலங்களை தட்சிண பிரதேசம் என்று பிரிப்பது என்றும் கூறப்பட்டது. அந்த அமைப்பின் நிலப்பகுதி வேறு எல்லைகளை உடையது. இந்தத் திட்டமேகூட ஏற்கப்படாமல் மூன்று அம்சங்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாக 1956 பிப்ரவரி 20-இல் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பொது வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நிகழ்த்தின.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

(1) மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப் படவேண்டும். (2) தமிழ்நாடு என்று சென்னை மாநிலத்திற்குப் பெயர் சூட்ட வேண்டும். (3) தட்சிணபிரதேசத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என இந்த மூன்று அம்சங்களுக்கான போராட்டம்தான் அது! இது வரலாற்றில் பதிவாகி இருக்கிற செய்தி.

1956 நவம்பரில் மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டது. தட்சிண பிரதேசத் திட்டம் கைவிடப்பட்டது. அறிஞர் அண்ணா காலத்தில் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம் நிகழ்ந்தது. இது மிக விரிவாகவும், ஆழமாகவும் சொல்லப்பட வேண்டிய பிரச்சினை. இங்கே இந்த அளவுக்குத்தான் சொல்ல முடியும். இப்போது பார்க்க வேண் டிய பிரச்சினை என்னவென்றால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அரசியல் சட்ட ஏற்பளிப்பு பெறப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் பெயர் மாற்றம் செய்வதற்குரிய எத்தனத்தை பா.ஜ.க. செய்ய நினைக்கிறது.

அதற்கு இங்குள்ள அ.இ.அ.தி.மு.க.வும் துணை போகிறது என்பதே அந்த பா.ஜ.க. விளம்பரத்திலிருந்து நாம் பெறப்படுகிற செய்தியாக இருக்கிறது. சந்நியாசி ஆதித்தியநாத்தின் விளம்பரத்தைப் பார்த்தவுடன் யாருக்கு கோபம் வந்தது? தி.மு.க.வுக்குத்தான்! தி.மு.க.வுக்கு மட்டும் அல்ல.

ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் ஏற்பட்டாக வேண்டும். தமிழ் மண்ணை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கோப்படத்தான் செய்வார்கள். போராடிப் பெற்ற ஓர் உரிமையை அந்த இனம் இழக்கச் செய்யும் வண்ணம் பிரச்சினையை கிளறிப்பார்ப்பது எரிமலை முன் மகுடி வாசிப்பது போன்றது ஆகும். ஜனநாயகத்தில் இத்தகைய அராஜகவாதிகளுக்கு தீர்ப்பளிப்பது தேர்தல் ஒன்றேயாகும். இந்தத் தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள். தீர்ப்பு வழங்குவதற்குரிய ஓர் அம்சமாக ‘தக்ஷிண பிரதேசமும்’ சேர்ந்து இருக்கிறது. நாளை ஏப்ரல் - 6; தமிழக மக்கள் வாக்களித்து தமிழ்நாட்டை ஆள அனுமதிக்கும் நாள்! மக்கள் அனுமதிக்காக தி.மு.க. கடமையாற்ற காத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories