முரசொலி தலையங்கம்

“இராணுவத்தில் அரசியலைப் புகுத்துவது நாட்டுக்கே ஆபத்து” - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“இராணுவத்தில் அரசியல் புகுந்து விடுதலும் கூடாது; அரசியல், இராணுவமயமானதாக ஆகிவிடவும் கூடாது. அரசியல், காவிமயமானதாகி விடுவதை விட ஆபத்தானது - இராணுவம் அரசியல்மயமாதல். ஆனால், நாட்டில் இவை இரண்டும்தான் நடக்கிறது.

போர்ச் சூழலில் இராணுவத் தளபதிகள் பெயர் வெளியில் தெரியும். மற்றபடி அவர்கள் எல்லைக்குள் இயங்குபவர்கள். எல்லை தாண்டாதவர்கள். அவர்களுக்கு நாடும் மக்களும், எல்லையும் தான் முக்கியமே தவிர மதமும் சாதியும் அரசியலும் முக்கியமல்ல.

முப்படைகளுக்கு யார் தளபதியாக இருந்தாலும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் தான் இந்தியா காப்பாற்றப்படும். தங்களின் அரசியல் அபிலாசைகளுக்காக இராணுவத்தில் அரசியலைப் புகுத்தினால், நாட்டில் நிம்மதியற்ற சூழ்நிலையே உருவாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.

banner