ஒன்றியக் கவுன்சிலர் முடிவுகள்:
5067 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சிகள் 2338 இடங்களிலும் அ.தி..முக மற்றும் கூட்டணிக்கட்சிகள் 2185 இடங்களிலும் மற்ற கட்சிகள் 445 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மாவட்ட கவுன்சிலர் முடிவுகள்:
515 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் 271 இடங்களிலும் அ.தி.மு.க மற்றும் கூட்டணிக்கட்சிகள் 242 இடங்களிலும் வெற்றிபெற்றன.
கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தில் நியாயமாக வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆளும் கட்சியினர் அ.தி.மு.க வேட்பாளரை வெற்றி வேட்பாளராக அறிவித்ததால், செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ, ஜோதிமணி எம்.பி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட கவுன்சிலர் இரண்டாவது வார்டு தி.மு.க வேட்பாளர் செல்வம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் அதை அறிவிக்காமல் காலம் கடத்தி வருவதால் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்துக்குட்பட்ட குறுக்குச்சாலை ஊராட்சியில் முனியம்மாள் வயது 70 என்ற மூதாட்டி வெற்றி பெற்று ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் சுமார் 790 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி, கரூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு.
ஒன்றிய கவுன்சிலர் - திமுக கூட்டணி 1,720 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; அதிமுக கூட்டணி 1,348 இடங்களிலேயே வெற்றியடைந்துள்ளது.
மாவட்ட கவுன்சிலர் - தி.மு.க கூட்டணி 106 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 71 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் 5.45 மணி வரை ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் என எந்தப் பதவிக்கும் வெற்றி நிலவரங்களையும் அறிவிக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டிவந்தனர்.
அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அதிகாரிகளிடம் கடுமை காட்டியதையடுத்து, சில இடங்களின் வெற்றி அறிவிப்பை அதிகாரிகள் வெளியிட்டனர்.
கோவை மேட்டுப்பாளையம் வட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளேபாளையம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சிவக்குமார் 1558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்
சேலத்தில் வாக்கு எண்ணும் பணிகளை விரைவு டுத்த வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் தி.மு.க.வினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா!
நாமக்கல் மாவட்டத்தில் நடுகொம்பை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வியடைந்தார்.
திருப்பூர் அய்யம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் குலுக்கல் முறையில் தேர்வு.
2 பேர் சமமான எண்ணிக்கையில் வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் வேட்பாளர் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் 19-வது ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெள்ளையம்மாள் வெற்றி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் 2-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 2511 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியம் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் வெற்றி பெற்றதை அறிவிக்க விடாமல் அ.தி.மு.கவினர் முயற்சி
சான்றிதழ் தராமல் தேர்தல் அதிகாரி இழுத்தடித்ததால் தேர்தல் அலுவலர் அறை முன்பு தி.மு.க முகவர்கள் கடும் வாக்குவாதம்!
மதுரை ஒன்றிய கவுன்சிலர்களில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க முன்னிலை வகிக்கிறது. அதிக இடங்களில் தி.மு.க முன்னிலையில் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் முழுமையாக முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் தொடர்கிறது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு எண் 1 தி.மு.க வேட்பாளர் அ.கலைச்செல்வி 1,670 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் 1-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டிணம் ஒன்றியம் 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் 1960 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2வது வார்டு ஒன்றியக் குழு தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஓசூர் ஒன்றியத்தில் தபால் வாக்குகளில் உரிய படிவங்கள் நிரப்பப்படாததால் பதிவான தபால் வாக்குகள் அனைத்தும் செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் 3-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் ராசப்பன் வெற்றி. ஒன்றியக் கவுன்சிலர் 5-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கல்யாணி வெற்றி.
தஞ்சாவூர் மாவட்டம்
பட்டுக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி.
தருமபுரியில் உள்ள 9 வாக்கு என்னும் மையங்களில் இதுவரை வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடவில்லை.
செய்தியாளர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுமதி மறுப்பு.
சேலம் மாவட்டத்தில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க அதிகாரிகள் தாமதம்.
பல இடங்களில் தி.மு.க முன்னிலையில் இருப்பதால் முடிவுகளை அறிவிக்க அதிகாரிகள் தயக்கம்.
மாவட்ட கவுன்சிலர் தேர்தல் : தி.மு.க+ - 55 அ.தி.மு.க+ - 26
ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் : தி.மு.க+ - 92 அ.தி.மு.க+ - 61
#LocalBodyElectionResults #LocalBodyElection #TNSEC #Results
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரச்னைகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 27 மாவட்டங்களிலும் பதிவான வாக்குகள் 315 மையங்களில் எண்ணப்படுகின்றன.