மு.க.ஸ்டாலின்

“தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

“தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கத்திற்கும் அதிகமாக மழை பெய்வது தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டும், இச்சிக்கல் தொடர்ந்ததால், தமிழ்நாடு அரசால், கடந்த 3 மூன்று மாதங்களாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால், சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிப்பின்றி மீட்கப்பட்டன.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது x வலைதளப் பக்கத்தில், “கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம்.

பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது.

முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பதவியேற்பு விழாவிற்கு, ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா அழைப்பு விடுத்திருந்தும், மழை வெள்ள பாதிப்புகளை கவனிக்க வேண்டும் என்று, சென்னையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களப்பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories