இந்தியா

”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கள் செய்யப்படுகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை ஆங்கிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த பொதுநல வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியில் மட்டும் ஏன் வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்?. உச்ச நீதிமன்றம் பல்வேறு மாநிலங்களில் இருந்து தாக்கல் செய்யக்கூடிய வழக்குகளை விசாரிக்கிறது.

அப்படியானால் அனைத்து மாநில மொழிகளிலும் வழக்கு விசாரணையை நடத்த முடியுமா?. இது நடைமுறை சாத்தியமற்றது. இந்த மனு தவறான நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் விசாரிக்க முடியாது என கூறி இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories