அரசியல்

உத்தரப் பிரதேசத்தில் மூடப்படும் 27,764 தொடக்கப்பள்ளிகள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!

உத்தரப் பிரதேசத்தில் மூடப்படும் 27,764 தொடக்கப்பள்ளிகள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், அதிகப்படியான கல்வி வேற்றுமை கொண்ட மாநிலமாகவும், வேலைவாய்ப்பின்மையில் முதன்மை மாநிலமாகவும் விளங்கும் உத்தரப் பிரதேசத்தின் மாநில பா.ஜ.க அரசு, மற்றொரு திடுக்கிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.

அத்திட்டமே, உத்தரப் பிரதேசத்தில் இயங்கும் 27,764 பள்ளிகளை ‘குறைந்த சேர்க்கை’ பள்ளிகள் என காரணம் காட்டி, மூடும் திட்டம்.

கடந்த வாரம், மாணவர்களுக்கு கல்விச்சலுகை வழங்குகிறோம் என வெறும் ரூ.300க்கான காசோலையை வழங்கி, வஞ்சகம் செய்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, தற்போது மாணவர்களின் கல்விக் கனவையே சிதைக்கும் திட்டத்திற்கு வித்திட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் மூடப்படும் 27,764 தொடக்கப்பள்ளிகள்! : பிரியங்கா காந்தி கண்டனம்!

இது குறித்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தில் இயங்கி வரும் சுமார் 27 ஆயிரம் மழலை மற்றும் தொடக்க பள்ளிகளை மூடத் திட்டமிட்டுள்ளது மாநில பா.ஜ.க அரசு.

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக் கனவை சிதைக்கும் நடவடிக்கையாக, இது அமைந்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தொலைதூர கல்விக்கு முடிவுகட்ட ஒவ்வொரு கி.மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

ஆனால், தற்போது கல்வியே தேவையற்றது என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது பா.ஜ.க அரசு. நலத்திட்டங்கள் என்பது இலாபகர நோக்கில் செயல்படுத்துவது அல்ல. அவை மக்களுக்கானதாய் இருந்திட வேண்டும்.

எனினும், பா.ஜ.க.வின் நோக்கம் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி உரிமையை சிதைத்து, வஞ்சித்து வருவதாகவே அமைந்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories