இந்தியா

121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவ வழக்கு : போலே பாபாவை பாதுகாக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!

121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவ வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் போலே பாபாவின் பெயர் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

121 பேர் உயிரிழந்த ஹத்ராஸ் சம்பவ வழக்கு : போலே பாபாவை பாதுகாக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் ஜூலை 2 ஆம் தேதி ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. சாமியார் போலே பாபாவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது இவ்வழக்கு தொடர்பாக 3,200 பக்கங்களில் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குற்றப்பத்திரிக்கையில் 2 பெண்கள் உட்பட 11 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர்.

ஆனால், இதில் போலே பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்தவரான அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தேர்தலில் பா,ஜ.கவுக்கு ஆதரவு கிடைக்காது என்பதால் அவரை இவ்வழக்கிலிருந்து தப்ப விடப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதுகுறித்து குறிப்பிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, “போலே பாபாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லாதது ஜனநாயகத்துக்கு எதிரானது. 121 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குக் காரணமான அவரை, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தப்ப வைக்க முயல்கிறது” என்று தெரிவித்தார். மேலும் விசாரணை அறிக்கையில் போலே பாபாவின்பின் பெயர் இடம் பெற்று இருந்தது. ஆனால் தற்போது குற்றப்பத்திரிகையில் பாபா பெயர் இல்லாதது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories