அரசியல்

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் : தோல்வி பயத்தில் வாக்காளர்களை மிரட்டும் பாஜகவினர் !

ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல தொகுதிகளில் பாஜகவினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் : தோல்வி பயத்தில் வாக்காளர்களை மிரட்டும் பாஜகவினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஹரியானா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக சார்பில் முதலமைச்சராக நவாப் சிங் சைனி உள்ளார். ஹரியானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியோடு சட்டமன்றத்தின் ஆயுள் முடிவடையவுள்ளது.

இதன் காரணமாக ஹரியானாவில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தோல்வியை தழுவும் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் : தோல்வி பயத்தில் வாக்காளர்களை மிரட்டும் பாஜகவினர் !

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல தொகுதிகளில் பாஜகவினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் போட்டியிடும் ஜுலானா உள்ளிட்ட தொகுதிகளில் வாக்காளர்களை மிரட்டிய பாஜகவினர் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களால் துரத்தடிக்கப்பட்டனர்.

ஏற்கனவே , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன. இத்தகைய சூழலில். தோல்வி பயத்தில் பாஜக இவ்வாறு செயல்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கூறியுள்ளன.

banner

Related Stories

Related Stories