உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகன் அதுல் குமார். இவருக்கு ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் IITயில் சீட் கிடைத்துள்ளது.
இந்நிலையில், இவரது சேர்க்கைக்கு ரூ.17,500 கல்வி கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. வறுமையான குடும்பம் என்பதால் இந்த பணத்தை உடனே அவர்களால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. இதனால் மாணவனின் தந்தை கிராம மக்களிடம் கல்விக்கான கட்டணத்தை வசூல் செய்துள்ளார்.
பின்னர் கல்வி கட்டணம் செலுத்தும் போது, அதற்கான தேதி முடிந்து விட்டதாக கூறி மாணவனின் சீட் ரத்து செய்துள்ளது பல்கலைக்கழக நீர்வாகம். இதனைத் தொடர்ந்து மாணவனின் தந்த உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வுக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள், மாணவனை தன்பாத் IITயில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், எந்த மாணவரின் சேர்க்கைக்கும் இடையூறு ஏற்படாத வகையில் அதுல் குமாருக்கு சீட் வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஏழை, எளிய மாணவர்கள் IIT போன்ற உயர் படிப்புகளுக்கு செல்லும் நோக்கத்தில்தான் “அனைவருக்கும் IITM” என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைமுறைபடுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.