மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. தற்போது, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் புல்டோசர் மூலம் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது.
இந்த புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இருந்தும் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் மீறி குஜராத்தில் 1200 ஆண்டுகள் பழமையான மசூதி இடிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் 1200 ஆண்டுகள் பழமையான தர்கா மற்றும் மசூதி, கல்ல றைகள் உள்ளன. இந்து கோவி லுக்கு அருகில் எப்படி தர்கா, மசூதி இருக்கலாம் என பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவா கும்பல்கள் தொடர்ந்து பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அம்மாநில பா.ஜ.க அரசு ஆக்கிரமிப்பு நிலம் என கூறி 58 புல்டோசர்கள் மூலம் 1200 பழமையான மசுதியை இடித்து தள்ளியது. இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர்,”1200 ஆண்டுகள் பழமையான ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருந்த தர்கா மற்றும் மசூதியை குஜராத் அரசு இடித்துத் தள்ளியது. குஜராத் பா.ஜ.க அரசு மசூதி மற்றும் தர்காவை மட்டும் இடித்து தள்ள வில்லை, உச்சநீதிமன்ற உத்தரவையும் வெட்கமின்றித் தகர்த்துள்ளது.” விமர்சித்துள்ளார்.