இந்தியா

ஏமாற்றப்பட்டதே தெரியாமல் உண்மையான IPS அதிகாரி என்று சுற்றித் திரிந்த இளைஞர்... பீகாரில் அதிர்ச்சி !

ஏமாற்றப்பட்டதே தெரியாமல்  உண்மையான IPS அதிகாரி என்று சுற்றித் திரிந்த இளைஞர்... பீகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலத்தில் லக்கிசராய் பகுதியில் அமைந்துள்ளது கோவர்தன் பிஹா என்ற கிராமம். இங்கு வசித்து வருபவர் மிதிலேஷ் மஞ்சி (Mithilesh Manjhi). 18 வயது இளைஞரான இவர், சம்பவத்தன்று காவலர் சீறுடை அணிந்து கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். மிதிலேஷ் போலீஸ் சீறுடையில் வந்த நிலையில், அங்குள்ள மக்கள் கூட்டமாக கூடியுள்ளனர்.

காவலர் உடையில் வீட்டுக்கு சென்ற மிதிலேஷ், தனது தாயாரிடம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றும், தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் மனோஜ் சிங் என்பவரை சந்திக்க அதே காவலர் உடையில் சென்றுள்ளார். இதனால் அங்கு மேலும் கூட்டம் கூடியுள்ளது. கூட்டம் அதிகரிக்கவே இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏமாற்றப்பட்டதே தெரியாமல்  உண்மையான IPS அதிகாரி என்று சுற்றித் திரிந்த இளைஞர்... பீகாரில் அதிர்ச்சி !

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், மிதிலேஷை அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவர்களிடாம் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்றும், தனக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதோடு தன்னிடம் இருந்த துப்பாக்கியை கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போதுதான் மிதிலேஷ் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அதாவது வெறும் 10-ம் வகுப்பு மட்டுமே முடித்திருக்கும் மிதிலேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனோஜ் சிங் என்பவர் சந்தித்துள்ளார். அவரிடம் பேசும்போது, ரூ.2.3 லட்சம் பணம் இருந்தால், ஐ.பி.எஸ் அதிகாரி ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய மிதிலேஷ் பணத்துக்கு ஏற்பாடு செய்ய முனைப்பு காட்டியுள்ளார்.

ஏமாற்றப்பட்டதே தெரியாமல்  உண்மையான IPS அதிகாரி என்று சுற்றித் திரிந்த இளைஞர்... பீகாரில் அதிர்ச்சி !

அதன்படி மிதிலேஷ், தனது தாய்மாமாவிடம் இருந்து ரூ.2 லட்சத்தை கடனாக பெற்று அதில் பாதியை மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளார். பின்னர் மிதிலேஷின் உடல் அளவீடுகளை எடுத்துச்சென்ற மனோஜ் சிங், அதன்பிறகு அடுத்த நாள் மிதிலேஷிடம் காவலர் சீறுடையும், பேட்ஜையும், துப்பாக்கியும் கொடுத்துள்ளார். மேலும் அவர் தற்போது பயிற்சியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கண்ட மிதிலேஷ், உண்மையில் தான் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என நம்பி, போலீஸ் உடையில் சுற்றித்திரிந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் மிதிலேஷிடம் இருந்து போலீஸார் துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதனை செய்த போது, அது போலி துப்பாக்கி என தெரியவந்துள்ளது. தொடர்ந்து கைது செய்யப்பட்டிருக்கும் மிதிலேஷிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories