இந்தியா

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAC) 2024 நிறைவு! : இந்தியா முதலிடம் - தமிழ்நாட்டிற்கு 7 பதக்கம்!

இந்தியா சார்பில் 9 தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAC) 2024 நிறைவு! : இந்தியா முதலிடம் - தமிழ்நாட்டிற்கு 7 பதக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

South Asian Athletic Federation (SAAF) சார்பில் சென்னையில் நடைபெற்ற நான்காவது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAC) தொடரில் 48 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இத்தொடரில், இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களுடன் முதலிடத்தையும், இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.

இந்தியா சார்பில் 9 தமிழ்நாடு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 5 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றனர். அதிலும் அபிநயா என்கிற தமிழ்நாட்டு வீராங்னை 2 தங்கப்பதக்கங்களை தன்வசமாக்கினார்.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAC) 2024 நிறைவு! : இந்தியா முதலிடம் - தமிழ்நாட்டிற்கு 7 பதக்கம்!

தக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள் விபரம்;

அபிநயா - 2 தங்கம் (100மீ, 100மீ தொடர் ஓட்டம்)

கனிக்‌ஷா டீனா - 1 தங்கம் (400மீ)

பிரதிக்‌ஷா யமுனா - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்)

ஜிதின் - 1 தங்கம் (நீளம் தாண்டுதல்)

லக்‌ஷன்யா - 1 வெள்ளி (நீளம் தாண்டுதல்)

கார்த்திகேயன் - 1 வெள்ளி (100மீ தொடர் ஓட்டம்)

banner

Related Stories

Related Stories