இந்தியா

”கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய லெஜண்ட்” : ICC தலைவராக ஜெய் ஷா தேர்வு - பிரகாஷ்ராஜ் கிண்டல்!

ICC தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

”கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய லெஜண்ட்” : ICC தலைவராக ஜெய் ஷா தேர்வு - பிரகாஷ்ராஜ் கிண்டல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வாரிசு அரசியல் பற்றி வாய் கிழிய பேசும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தான் BCCI செயலாளர். தேசிய அளவில் ஒருபோட்டிக்கூட விளையாடாத ஜெய் ஷா எப்படி BCCI செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்விகள் அப்போது எழுந்தது.

தற்பேது ICC தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூட அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், "பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் விக்கெட் கீப்பராகவும் ஈடு இணையற்ற ஆல் ரவுண்டராகவும் கிரிக்கெட்டுக்கு இந்தியா

உருவாக்கி தந்திருக்கும் ஓர் அற்புதமான, பெருமைக்குரிய திறமையாளர் தற்போது ICC தலைவராக, அதுவும் போட்டியின்றி, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்து நம் பாராட்டுகளை தெரிவிப்போம்" என கிண்டல் அடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories