இந்தியா

கங்கனாவின் எல்லைமீறும் பேச்சு... வேடிக்கை பார்க்கும் பாஜக... களத்தில் இறங்கிய விவசாயிகள் !

கங்கனாவின் எல்லைமீறும் பேச்சு... வேடிக்கை பார்க்கும் பாஜக... களத்தில் இறங்கிய விவசாயிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான பல விஷயங்களை செய்து வருகிறது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என பலருக்கும் கேடு விளைவிக்கும் பல்வேறு சட்டங்களையும் இயற்றி வருகிறது. அந்த வகையில் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றியது.

இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரை வைத்து போராட்டத்தை பாஜக அரசு கட்டுக்குள் கொண்டு வர முயன்றும், விவசாயிகள் தங்கள் போராட்டத்தில் இருந்து பின் வாங்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டங்களை திரும்பப்பெற்றது பாஜக அரசு. இதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக (MSP) விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் வரும்போதும் இதனை பாஜக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனிடையே பாஜக ஆதரவாளராக இருந்த நடிகை கங்கனா, விவசாயிகளை தீவிரவாதிகள் என்று பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அண்மையில் பாஜகவில் இணைந்த அவர், மத்திய பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கங்கனாவின் எல்லைமீறும் பேச்சு... வேடிக்கை பார்க்கும் பாஜக... களத்தில் இறங்கிய விவசாயிகள் !

தற்போது பாஜக எம்.பி-யாக இருக்கும் கங்கனா, மக்களுக்கான கருத்தை பேசுவதை விட்டுவிட்டு, இந்திரா காந்தி, காங்கிரஸ், விவசாயிகள் உள்ளிட்டோர்களை குறித்து சர்ச்சை பேச்சுக்களை பேசி வருகிறார். அந்த வகையில் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், விவசாயிகள் போராட்டத்தின் போது பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

இதுகுறித்து கங்கனா பேசியதாவது, “ஒன்றிய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது மோடி அரசின் வலுவான நடவடிக்கைகள் இல்லாவிட்டால், இந்தியாவை வங்கதேசத்தில் இப்போது நடக்கும் சூழலை போராட்டம் நடத்திய விவசாயிகள் உருவாக்கியிருப்பார்கள்.

வேளாண் சட்டங்கள் போராட்டத்தின்போது தூக்கிலிடுதலும், பாலியல் வன்கொடுமைகளும் நடந்தன. அந்த சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததற்கு அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாட்டு சதிகள்தான் காரணம். இந்த நாடு நாய்களின் கைகளுக்கு சென்றாலும் கவலையில்லை என்றே இருக்கிறார்கள்." என்றார்.

கங்கனாவின் எல்லைமீறும் பேச்சு... வேடிக்கை பார்க்கும் பாஜக... களத்தில் இறங்கிய விவசாயிகள் !

இவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இவரது கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்மந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது பாஜக. எனினும் தற்போது வரை இவரது பேச்சுக்கு பாஜக தலைமை கண்டனம் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் தனது பேச்சுக்கு இதுவரை மன்னிப்பு கேட்கவும் இல்லை.

தொடர்ந்து இந்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கங்கானாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் காப்பூர் பகுதியில் பாஜக எம்.பி கங்கனா ரனாவத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவரது உருவபொம்மையை எரிக்க முயன்றபோது, போலீசார் உருவ பொம்மையை கைப்பற்றி எரிக்க விடாமல் தடுத்தனர். விவசாயிகள் போராட்டத்தை கொச்சை படுத்தி பேசிய கங்கனா ரனாவத்துக்கு எதிராக உத்தர பிரதேசம், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் அதிகம் இருக்கும் ஹரியானா மாநிலத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், கங்கனாவின் இந்த கருத்து விவசாயிகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories