இந்தியா

சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணிக்கு அதிக மவுசு : 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!

கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணி மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

சிறை கைதிகள் தயாரிக்கும் பிரியாணிக்கு அதிக மவுசு : 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தில் “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டடது. இந்த திட்டத்தில் சிறையில் இருக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவுகள் வணிக ரீதியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில் கண்ணூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.8.5 கோடிக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற சிறைவாசிகள் விடுதலையான பிறகு அவர்கள் சொந்தமாக உணவகம் வைக்கவும் பெரும் உதவியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories