விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தில் தொடரை நடத்த ஆஸ்திரேலிய கேப்டன் எதிர்ப்பு !

இந்த நேரத்தில் வங்கதேசத்தில் விளையாடுவது தவறான செயலாக இருக்கும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி கூறியுள்ளார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தில் தொடரை நடத்த ஆஸ்திரேலிய கேப்டன் எதிர்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் வரும் 3ம் தேதி முதல் நடைபெறும் என ஐசிசி அறிவித்திருந்தது. ஆனால் இடஒதுக்கீடுக்கு எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் அமைதி சீர்குலைந்துள்ளது.

இதனால் போட்டிக்கு வரும் வீராங்கனைகளுக்கும், வெளிநாட்டு ரசிகர்களுக்கும் வங்கதேச அரசால் போதிய பாதுகாப்பு வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடைபெறவிருந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை வேறு நாட்டுக்கு மாற்ற ஐசிசி முயற்சித்து வருகிறது.

இந்த தொடரை நடத்த இந்தியா மறுத்த நிலையில், போட்டி இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த தொடரை நடத்த விரும்புவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பை : வங்கதேசத்தில் தொடரை நடத்த ஆஸ்திரேலிய கேப்டன் எதிர்ப்பு !

இந்த நிலையில், இந்த நேரத்தில் வங்கதேசத்தில் விளையாடுவது தவறான செயலாக இருக்கும் என ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் அலிசா ஹீலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசியுள்ள அவர், " வங்கதேசத்தில் கலவரம் நடந்துகொண்டுள்ள இந்த நேரத்தில் அங்கு விளையாடுவது தவறான செயலாக இருக்கும் என தோன்றுகிறது.

அதே நேரம் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, எங்களை பெரிதும் பாதிக்காது. போட்டிகள் எங்கு நடைபெற்றாலும் அதற்காக நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம். இந்த முறையும் உலகக்கோப்பையை கைப்பற்றுவோம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories