இந்தியா

வயநாடு நிலச்சரிவு : கேரள வங்கி எடுத்த முக்கிய முடிவு - அது என்ன?

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது.

வயநாடு நிலச்சரிவு : கேரள வங்கி எடுத்த முக்கிய முடிவு - அது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இன்னும் 10 நாட்களுக்கு மேலாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள மாநில அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்த பிறகு கூட இன்றும் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசுக்கூட ரூ.5 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிவாரண நிதி அளித்து வயநாட்டிற்காக கைகொடுத்து உதவி வருகிறார்கள்.

இந்நிலையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது இவ்வங்கி ஊழயர்கள் தங்களது 5 நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்காக கொடுத்துள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories