தமிழ்நாடு

"மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" : முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு!

மாநில அரசுகள் தங்கள் உரிமைகளை பெற ஒன்றிணைந்து போராட வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் அறிவுறுத்தியுள்ளார்.

"மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்" : முன்னாள் நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை தரமனியில் தனியார் இதழியல் கல்லூரியில் இந்தியாவில் ”ஒன்றிய - மாநில நிதி உறவுகள் - சவால்களும் முன்னேயுள்ள வழிகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கேரள மாநில முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதையடுத் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக், ”மாநிலங்கள் தங்களுக்கான உரிமையை பெறுவதற்கு தனித்தனியாக போராட முடியாது. கூட்டாட்சியில் நம்பிக்கை உள்ள மாநில அரசுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

ஒன்றிய அரசாங்கத்திடமிருந்து 42% pநிதி பகிர்வை மாநிலங்கள் பெற்று வந்தன. ஆனால் தற்போது அது 32%-மாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஒன்றிய நிதியில் 50% மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்படும் நிதி குறித்து ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் வஞ்சிக்கப்படும் மாநிலங்கள் ஒன்றிணைந்து 16வது நிதி ஆணையம் முன் குரல் கொடுக்க வேண்டும்" என கூறினார்.

banner

Related Stories

Related Stories