இந்தியா

இந்தியாவின் கல்வி மையமாக ஒளிரும் தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

"திராவிட மாடல் அரசின் பெருமைக்குரிய தருணம் இது. இந்தியாவின் வருங்காலத்தை வழிநடத்தும் நேரம் இது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் கல்வி மையமாக ஒளிரும் தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை வகித்துள்ளதற்கு, மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒன்றிய கல்வி அமைச்சகம், 2024ஆம் ஆண்டிற்கான உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலை (NIRF) வெளியிட்டுள்ளது.

அதில், முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. இதன் வழி, இந்தியாவிலேயே, முதல் 100 கல்வி நிறுவனங்களில் அதிகப்படியான கல்விநிறுவனங்கள் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்ற பெருமையும் பெற்றுள்ளது.

குறிப்பாக, உயர்நிலை கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி, இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 6ஆவது முறையாக முதலிடம் பெற்று, தனி சாதனையையும் உருவாக்கியுள்ளது சென்னை ஐ.ஐ.டி.

இந்தியாவின் கல்வி மையமாக ஒளிரும் தமிழ்நாடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பில், ஒவ்வொரு ஆண்டும் தேசியத்தில் முதலிடம் வகிக்கும் கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி.யில், தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்வதும் குறிப்பிடத்தக்கதாய் அமைந்துள்ளது.

மேலும், உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலிலும் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்நிலையில், இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஒன்றியத்தின் NIRF தரவரிசை பட்டியலில், தமிழ்நாட்டின் உயர்கல்வி நிலையங்கள் முன்னிலை வகித்து, கல்வி தரத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளோம்.

திராவிட மாடல் அரசின் பெருமைக்குரிய தருணம் இது. இந்தியாவின் வருங்காலத்தை வழிநடத்தும் நேரம் இது.

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற சிறந்த திட்டங்களால், நம் மாணவர்கள் உயர்கல்விகளில் புது உச்சங்களை எட்டுவது தொடரும்” என பெருமிதம் கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories