இந்தியா

குஜராத் மாடலின் தோல்வி - நூதன போராட்டத்தின் வழி உண்மையை வெளிப்படுத்திய காங்கிரஸ்!

குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள குழிகளை விமர்சிக்கும் வகையில் அதில் மண்ணைக் கொட்டி, காங்கிரஸார் நூதன முறையில் போராட்டம்

குஜராத் மாடலின் தோல்வி - நூதன போராட்டத்தின் வழி உண்மையை வெளிப்படுத்திய காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்து சுமார் 30 ஆண்டுகளை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், பொருளாதார பின்னடைவு, வேலைவாய்ப்பின்மை, கட்டுமான கோளாறு என பல்வேறு விமர்சனங்கள் தலை தூக்கத்தொடங்கியுள்ளன.

குறிப்பாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், குஜராத்தின் 31 மாவட்டங்களில் 2.7 இலட்சம் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர் என குஜராத் பா.ஜ.க அரசே, சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டது.

அதன் எதிரொலியாக, மூன்று கிழமைகளுக்கு முன் 10 பணியிடங்களுக்கான நேர்காணலில் 1,800 பேருக்கு மேல் வருகை தந்த நிகழ்வு அமைந்தது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வெளியான தகவலின் படி, 2 இலட்சம் படித்த இளைஞர்களில் வெறும் 32 பேரே அரசுப்பணிகளை கைப்பற்றியுள்ளனர் என்ற செய்தி வெளிப்பட்டது.

இதனிடையே, குஜராத்தில் வேலைவாய்ப்பில் மட்டுமல்ல, கட்டமைப்பிலும் மந்தமே நீடிக்கிறது என்பதனை உறுதி செய்யும் வகையில், ராஜ்கோட் வானூர்தி நிலையத்தின் மேற்கூரை இடிமானம். சாலைகளில் ஏற்படும் குழிகள், விரிசல்கள், ஆகியவை அமைந்தன.

அவ்வரிசையில், குஜராத் மாநிலத்தின் சபர்கந்தா பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் உள்ள குழிகளை விமர்சிக்கும் வகையில் அதில் மண்ணைக் கொட்டி, காங்கிரஸார் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தின் காணொளி, தற்போது இணையத்தில் வெகுமாக பரவி, பெருவாரியான பார்வையாளர்களின் விமர்சனங்களை பெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories