சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் நகர் வரை செல்லும் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கம்போல் ஜூலை 17 ஆம் தேதி புறப்பட்டது. இதையடுத்து இந்த ரயில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பிகவுரா என்ற இடத்தில் சென்ற போது 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ரயில் விபத்தால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. ரயில்வேயில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பாததே இதற்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை காது கொடுத்து கேட்காமல் பா.ஜ.க அரச அமைதியாக இருந்த வருகிறது.
இந்நிலையில், ”அடிக்கடி ரயில் விபத்து ஏற்படுகின்ற நிலையில் விபத்தை தடுப்பதற்கான முன் எச்சரிக்கை எதுவும் எடுக்காமல் ஒன்றிய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?. தொடர்ந்து ரயில் விபத்து ஏற்பட்டாலும் அதிலிருந்து ஒன்றிய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை. பயணிகளின் பாதுகாப்பில் பா.ஜ.க அலட்சியமாக செயல்படுவது ஏன்?.” மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார்.