இந்தியா

மனோரமா கேத்கருக்கு ஜூலை 20 வரை போலீஸ் காவல் : பூனே நீதிமன்றம் உத்தரவு!

சிவில் சர்வீஸ் தேர்வில், மாற்றுத்திறனாளி என பொய் சான்றிதழ் வழங்கி, பதவிபெற்ற பூஜா கேதகர் தாயார் மனோரமா கேத்கருக்கு, விவசாயிகளை மிரட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஜூலை 20 வரை போலீஸ் காவல்.

மனோரமா கேத்கருக்கு ஜூலை 20 வரை போலீஸ் காவல் : பூனே நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மகாராஷ்டிரத்தை சேர்ந்த பூஜா கேத்கர், சமீபத்தில் தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன் தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தியதாகவும் சர்ச்சையில் சிக்கினார்.

இதனையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில், பூஜா கேத்கர் போலி சான்றிதழ் வழி ஐ.ஏ.எஸ். பதவி பெற்றது அம்பலமாகது.

இதனால், சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து மாற்றுத்திறனாளி என்று அடையாளப்படுத்தியதற்காகவும், ஓ.பி.சி ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதற்காகவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேத்கரை, சிவில் சர்வீஸ் பயிற்சியிலிருந்து நீக்கி மகாராஷ்ரா அரசு அதிரடி உத்தரவிட்டது.

இதனிடையே, பூஜா கேத்கரின் தாய் மானோரமா கேத்கர், நில விவகாரம் தொடர்பாக விவசாயி ஒருவரை துப்பாக்கியை காட்டிய வழக்கில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இச்சூழலில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனோரமா கேத்கருக்கு, விவசாயிகளை மிரட்டியது உள்ளிட்ட காரணங்களுக்காக, ஜூலை 20 வரை போலீஸ் காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பூனே நீதிமன்றம்.

banner

Related Stories

Related Stories