இந்தியா

”நீட் தேர்வு ஊழல் தேர்வு” : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

நீட் தேர்வு ஊழல் தேர்வு என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

”நீட் தேர்வு ஊழல் தேர்வு”  : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது.

இதையடுத்து நீட் தேர்வை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் குரல் ஒலித்து வருகிறது. நீட் தேர்வு அறிவித்தபோது தமிழ்நாட்டில் இருந்துதான் முதல் எதிர்ப்பு குரல் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இப்போது நாடுமுழுவதும் தமிழ்நாட்டில் குரலை எதிரொலித்து வருகின்றனர். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட நீட் தேர்வை கண்டித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வு ஒரு ஊழல் தேர்வு என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டிகொடுத்துள்ள அவர், ”நீட் தேர்வு ஒரு ஊழல். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்."என தெரிவித்துள்ளார்.

டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநில சட்டமன்றங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசினை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களுக்கு அண்மையில் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories