இந்தியா

“IIT வேலை வாய்ப்புகளில் வேலையில்லா திண்டாட்டம் - மோடி அரசின் கொள்கையே காரணம்” : ராகுல் காந்தி கண்டனம்!

“ஐ.ஐ.டி-களில் வேலை வாய்ப்புகளில் 2022ல் 19% மாணவர்களால் வேலைவாய்ப்புகளை பெற முடியவில்லை. நடப்பு ஆண்டில் இது 38% ஆக இரட்டிப்பாகி உள்ளது" என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

“IIT வேலை வாய்ப்புகளில் வேலையில்லா திண்டாட்டம் - மோடி அரசின் கொள்கையே காரணம்” : ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“ஐ.ஐ.டி-களில் வேலை வாய்ப்புகளில் தொடர்ச்சியான சரிவு, வருடாந்திர தொகுப்புகளின் சரிவு ஆகியவை கடந்த 2022ல் 19% மாணவர்களால் வேலைவாய்ப்புகளை பெற முடியவில்லை. நடப்பு ஆண்டில் இது 38% ஆக இரட்டிப்பாகி உள்ளது. இன்றைய இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் முற்றிலும் சிதைந்து போயிருக்கிறார்கள்." என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் தற்போது மிகவும் மதிப்புமிக்க ஐ.ஐ.டிகள் போன்ற நிறுவனங்கள் கூட பொருளாதார மந்த நிலையின் மோசமான விளைவுகளை எதிர்கொள்கின்றன.

ஐ.ஐ.டிகளில் வேலை வாய்ப்புகளில் தொடர்ச்சியான சரிவு, வருடாந்திர தொகுப்புகளின் சரிவு ஆகியவை கடந்த 2022ல் 19% மாணவர்களால் வேலைவாய்ப்புகளை பெற முடியவில்லை. நடப்பு ஆண்டில் இது 38% ஆக இரட்டிப்பாகி உள்ளது. இன்றைய இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தில் முற்றிலும் சிதைந்து போயிருக்கிறார்கள்.

“IIT வேலை வாய்ப்புகளில் வேலையில்லா திண்டாட்டம் - மோடி அரசின் கொள்கையே காரணம்” : ராகுல் காந்தி கண்டனம்!

முதலில் வேலை இல்லை. அவ்வாறு வேலை கிடைத்தாலும் சரியான வருமானம் இல்லை. பிள்ளைகளை தொழிற்கல்வியில் சேர்க்கவும், அந்த படிப்புகளுக்கு தயாராக்கவும் பெற்றோர்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். மாணவர்கள் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி படிக்கும் நினைக்குத் தள்ளப்பட்டுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு வேலை கிடைக்காமலே அல்லது குறைந்த ஊதியத்தில்தான் வேலை கிடைக்கிறது. இது சரிவை மட்டுமே ஏற்படுத்துகிறது.

பாஜகவின் மோசமான கொள்கைகள், கல்விக்கு எதிரான நோக்கத்தின் விளைவே இது. இந்த நாட்டின் ஒளிமயமான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்தியாவின் கடின உழைப்பாளிகளான இளைஞர்களை இந்த நெருக்கடியிருந்து விடுவிக்க மோடி அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?

எதிர்க்கட்சியானது இளைஞர்களின் முழுப்பலத்துடன் குரல் எழுப்பி அவர்களுக்கு இழைக்கப்படும் அதீதிக்கும் அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories