அரசியல்

ஒரு மாத்தில் 5 முறை தீவிரவாத தாக்குதல் - தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்தது மட்டுமல்லாமல், இராணுவ வீரர்களின் உயிர்கள் மீதும் அச்சுறுத்தல் எழத்தொடங்கியுள்ளது.

ஒரு மாத்தில் 5 முறை தீவிரவாத தாக்குதல் - தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து, கூட்டணி கட்சிகளின் உதவியால், ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சியமைத்து, ஒரு மாதமே நிறைவுற்று இருக்கிற நிலையில், தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், ஒன்றிய பாதுகாப்புத் துறையின் அலட்சியத்தால், புல்வாமா தாக்குதல் அரங்கேறி, சுமார் 40 பேர் உயிரிழக்க நேர்ந்தது, அருணாச்சல எல்லைப்பகுதிகளுக்கு, சீன அரசு சொந்தம் கொண்டாடியது ஆகிய நிகழ்வுகளுக்கான தீர்வுகளே, இன்றளவும் கிடைக்கப்பெறவில்லை என்ற சூழலில், நேற்றைய (08.07.24) நாள், ஜம்மு - காஷ்மீரின் கதுவா பகுதியில் இராணுவ வாகனங்கள் அணிவகுத்து சென்றபோது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்து, 4 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எழுந்தது மட்டுமல்லாமல், இராணுவ வீரர்களின் உயிர்கள் மீதும் அச்சுறுத்தல் எழத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஜம்மு - காஷ்மீரில், இந்திய இராணுவத்தினர் மீது நடத்தியிருக்கிற தீவிரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. கடந்த ஒரு மாதத்தில், தீவிரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த சிக்கலையும், வெற்று பேச்சுகளால் புறந்தள்ளாமல், நாட்டு மக்களின் பாதுகாப்பையும், இராணுவ வீரர்களின் உயிர்களையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தனது, X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரை அடுத்து, சிவசேனா (தாக்கரே) கட்சி மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, “பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடித்த ஒரு மாதத்தில், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது, இது 5ஆவது முறை. எனினும், இது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், தேசிய புலனாய்வு முகமை என எந்த திசையிலிருந்தும், இவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், பாதுகாப்புத் துறை மீது மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதே, அவநம்பிக்கை எழத் தொடங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories