இந்தியா

அயோத்தி நில பேர ஊழல் : நில மாபியாக்களாக செயல்படும் பா.ஜ.க தலைவர்கள்!

அயோத்தியில் விவசாயிகளிடம் நிலத்தை வாங்கி அதிக விலைக்கு விற்று நில மாபியாக்கள் லாபம் சம்பாதிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

அயோத்தி நில பேர ஊழல் :
நில மாபியாக்களாக செயல்படும் பா.ஜ.க தலைவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் 2017 ஆம் ஆண்டில் இருந்து முதலமைச்சாரக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். பா.ஜ.க ஆட்சியில் அயோத்தியில் ராமல் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்தும், பொதுமக்கள் இடம் இருந்தும் நிலங்கள் வாங்கப்பட்டது.

இதற்காக பா.ஜ.க அரசு 7 ஆண்டுகளாக நில மதிப்பு விகிதத்தை அதிகரிக்காமல் இருந்துள்ளது. இதனால் நிலத்தை விற்பவர்களுக்கு குறைந்த விலையே கிடைத்து வருகிறது. அதேநேரம் நிலத்தை வாங்கியவர்கள் அதை அதிக லாபத்திற்கு விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.

அதில் குறிப்பாக, பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக நிலங்களை வாங்கி விற்றது தெரியவந்துள்ளது. அருணாச்சல பிரதேச துணை முதல்வர் சௌனா மெய்ன், மகள் சௌ கான் செங் மெய்ன, ஆதித்யா மெய்ன் ஆகியோர் அயோத்தியை பிரிக்கும் சரயு நதியின் குறுக்கே கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மகேஷ்பூரில் செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ரூ.3.72 கோடிக்கு 3.99 ஹெக்டேர்களை வாங்கியுள்ளனர். பின்னர் 0.768 ஹெக்டேரை ரூ.98 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.

அதேபோல் பா.ஜ.க முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன் சிங்கின் மகன் கரண் கரண் பூஷன்பூஷன் நந்தினியின் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்குச் மகேஷ்பூரில் 0.97 ஹெக்டேர் நிலத்தை ஜனவரி 2023 இல் ரூ. 1.15 கோடிக்கு வாங்கி, 635.72 சதுர மீட்டரை ரூ. 60.96 லட்சத்திற்கு விற்றார். இப்படி நிலங்களை வாங்கி விற்றது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ்,”பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக நில மதிப்பு விகிதத்தை அதிகரிக்காமல் இருப்பது உள்ளூர் மக்களுக்கு எதிரான பொருளாதார சதி. இதன் காரணமாக பல கோடி ரூபாய்க்கு நில மோசடி நடந்துள்ளது.

அயோத்தி-பைசாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இவற்றின் மூலம் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஏழைகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நிலத்தை தூக்கி எறியும் விலைக்கு எடுப்பது ஒருவகை நிலத்தை அபகரிக்கும் செயலாகும். அயோத்தியில் வளர்ச்சி என்ற பெயரில் நடந்த ‘மோசடி’ மற்றும் நில பேரங்கள் குறித்து முழுமையான விசாரணை மற்றும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories