மோடி பிரதமர் ஆன பின்பு நாட்டின் பொ ருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. கடந்த 10 வருட ஆட்சியில் ஒன்றிய பாஜக அரசு புதிதாக பொதுத்துறை வங்கி, கூட்டுறவு வங்கி எதையும் உருவாக்காத நிலையில், ஏற்கெனவே இருந்த வங்கிகள் அடுத்த டுத்து திவால் ஆவது வாடிக்கை யாக உள்ளது.
இந்நிலையில், மோடி தொடர்ந்து 3 முறை பிரதமர் இருக்கையில் அமர உதவியாக இருந்த வாரணாசி மக்களவை தொகுதியில் நிதி நெருக்கடி காரணமாக பிரபல கூட்டுறவு வங்கியை மூட ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளது பனாரஸ் மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி. மாநிலத்தின் முக்கிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான இந்த பனாரஸ் மெர்க்கண்டைல் வங்கி யின் உரிமத்தை ரத்து செய்வதா கவும், விரைவில் வங்கியை மூடும் நடவடிக்கையை மேற் கொள்ளுமாறும் உத்தரப்பிரதேச பாஜக அரசிற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 3 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அனுப்பியது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நோட்டீஸ் அறி விப்பில்,”வாரணாசியை மைய மாக கொண்டு இயங்கும் பனாரஸ் மெர்கண்டைல் கூட்டுறவு வங்கிக்கு போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லை. வைப்புதாரர்களின் நலன்களுக்கான சாதகமான சூழலும் வங்கி யிடம் இல்லை.
வைப்புத் தொகை யாளர்களுக்கு முழு பணத்தை யும் செலுத்த முடியாத அள விற்கு வங்கியின் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. இத னால் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழி யில்லை. பனாரஸ் மெர்க்கண்டைல் வங்கியை மூட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப்பிரதேச கூட்டுறவு ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகி யோரிடம் கலைப்பாளர் பிரிவு அதிகாரியை நியமிக்க உத்தர விட்டுள்ளோம்” என கூறப் பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வாரணாசி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஊழல் சம்பவம் காரணமா?
பாஜக ஆளும் மாநிலங்களில் கூட்டுறவு வங்கிகளை மூடும் நோக்கத்தில் மறைமுகமாக முறை கேடு சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. நிதி நிலைமை பற்றி எந்தவித அறி விப்பும் வெளியிடமாட்டார்கள். பெயரளவிற்கு வங்கி இருப்பது மட்டும் தெரியும், திடீரென திவால் என்று சொல்வார்கள். இதே வழியில்தான் தற்போது பனாரஸ் மெர்க்கண்டைல் கூட்டுறவு வங்கி திவாலானதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மோடி வாரணாசியை உலகின் மிகப்பெரிய வளர்ச்சி நகரமாக மாற்றுவேன் என கூறி பிரச்சாரம் மேற்கொண்டு பிரதமர் ஆனார். ஆனால் அவரது தவறான பொருளாதாரக் கொள்கையால் நன்றாக இருந்த கூட்டுறவு வங்கி யும் திவாலாகியுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமாகிறது என்பதை வாரணாசி மத்திய கூட்டுறவு வங்கி உணர்த்தியுள்ளது.
- நன்றி தீக்கதிர்