இந்தியா

பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் !

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதனை திரும்ப கட்டாததால் அவர் மீது வங்கிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவ செய்யப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு வெளிநாட்டிற்கு தப்பிசென்ற அவர் தற்போது வரை இந்தியா திரும்பாமல் இங்கிலாந்தின் லண்டன் நகரிலேயே வசித்து வருகிறார். எனினும் அவர் மீதான வழக்கு தற்போதுவரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் அவர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு ஏராளமான சட்டசிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் !

இந்த நிலையில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்தமுடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னரும் பலமுறை விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சி தற்போது வரை கைகூடவில்லை என்பதும், இது வெளியுறவுத்துறையின் மோசமான தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories