அரசியல்

மஹாராஷ்டிரா : சட்டமேலவை தேர்தலிலும் தொடரும் இந்தியா கூட்டணியின் வெற்றி... தொடர் தோல்வி முகத்தில் பாஜக !

மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மஹாராஷ்டிரா : சட்டமேலவை தேர்தலிலும் தொடரும் இந்தியா கூட்டணியின் வெற்றி... தொடர் தோல்வி முகத்தில் பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

மஹாராஷ்டிரா : சட்டமேலவை தேர்தலிலும் தொடரும் இந்தியா கூட்டணியின் வெற்றி... தொடர் தோல்வி முகத்தில் பாஜக !

எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இந்த தேர்தலில் மும்பையில் பட்டதாரிகள் தொகுதி மற்றும் ஆசிரியர் தொகுதி இரண்டிலும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வெற்றிபெற்றது. ஒரு இடத்தில மட்டும் பாஜக வெற்றிபெற்ற நிலையில், மற்றொரு தொகுதிக்கான முடிவுகள் மட்டும் கள்ளஓட்டு புகார் எழுந்த காரணத்தால் அறிவிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories