இந்தியா

நீட் முறைகேடு : “மன்னிக்க முடியாத குற்றம்” - கேரளா சட்டப்பேரவையில் 2 மணி நேரம் சிறப்பு விவாதம் !

நீட் முறைகேடு குறித்து கேரள சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற்றது.

நீட் முறைகேடு : “மன்னிக்க முடியாத குற்றம்” - கேரளா சட்டப்பேரவையில் 2 மணி நேரம் சிறப்பு விவாதம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடப்பு ஆண்டில் நடைபெற்ற இளநிலை (UG) படிப்புகளுக்கான நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவில் ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் மோசடி நடந்துள்ளது. இவையனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள், அரசு அலுவலர்கள் என பலரும் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் நடைபெறும் விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமாக இருக்கிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பலரும் வலியுறுத்தி வந்த போதிலும், ரத்து செய்யப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

நீட் முறைகேடு : “மன்னிக்க முடியாத குற்றம்” - கேரளா சட்டப்பேரவையில் 2 மணி நேரம் சிறப்பு விவாதம் !

இந்த விவகாரம் பூதகரமாகியுள்ள நிலையில், நீட் முதுநிலை (PG) தேர்வு நடைபெறுவதற்கு வெறும் 12 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளில் ஒன்றிய அரசும், தேசிய தேர்வு முகமையும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி அனைத்து வழக்குகளும் ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நீட் தேர்வு முறைகேட்டை தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களுக்கான NET தேர்வின் வினாத்தாள் டார்க் வலைதளத்தில், டெலிகிராமிலும் வெளிவந்தது. இதையடுத்து தேர்வு நடைபெற்று முடிந்த மறுநாளே அந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய அரசின் சார்பாக நடைபெறும் தேர்வுகளின் முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி வரும் நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி வருகிறது.

நீட் முறைகேடு : “மன்னிக்க முடியாத குற்றம்” - கேரளா சட்டப்பேரவையில் 2 மணி நேரம் சிறப்பு விவாதம் !

எனினும் நீட் முறைகேடுக்கு ஒன்றிய அரசு அலட்சியமாக பதிலளித்தும் பேசியும் வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கேரள சட்டப்பேரவையில் நீட் மற்றும் நெட் முறைகேடு குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் பல்வேறு கட்சியினர் ஒன்றிய அரசுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

நீட் தேர்வு 24 லட்சம் குடும்பங்களின் கனவு என்றும், அதனை தேசிய தேர்வு முகமையும் ஒன்றிய அரசும் சிதைத்துவிட்டது என்றும், பல ஆண்டுகள் மாணவர்கள் சிரமப்பட்டு படித்து எழுதிய நீட் தேர்வின் கேள்வித்தாள் கசிந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் பல காட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் விமர்சனங்களையும் கண்டனங்களையும் முன்வைத்தனர். மேலும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தனித்தீர்மானமும் நிறைவேற்றம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories