பா.ஜ.க ஒருவரை ஆதரிக்கிறது என்றால், அவர் பார்ப்பன உணர்வு சார்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது பா.ஜ.க.வின் நிதிநிலைக்கு உதவும் வகையில் இருத்தல் வேண்டும்.
இவ்விரண்டில் பார்ப்பன உணர்வு சார்ந்த அரசியல் குறித்து பல நிகழ்வுகள், மக்களின் பார்வையிலிருந்து தப்பாத போதும், பா.ஜ.க.வின் நிதிநிலைக்கு உதவும் பல நிகழ்வுகள் மறைவாகவே நடந்து வருகிறது.
அவ்வகையில், ஒன்றிய அரசு அடிக்கல் நாட்டும் பல திட்டங்களின், மறைவில் பல கோடிகள் பறிமாற்றப்படுகின்றன என்பது அண்மை நிகழ்வுகளின் வழி வெளிவந்துள்ளது.
இது போன்ற நடவடிக்கைகளால், கோடிகளில் கவனம் செலுத்தும் பா.ஜ.க அரசு, ஒப்பந்ததாரர்கள் அரசின் திட்டங்களை செயல்படுத்த தகுதி உள்ளவர்களா என்று கவனிக்க தவறி வருகிறது.
அவ்வாறு தகுதியற்றவர்களை முன்னிறுத்தி கட்டப்பட்டது தான், சுபால் மேம்பாலம், சில்க்யாரா சுரங்கம், டெல்லியின் பிரகதி மைதான் சுரங்கம் ஆகியவை.
பீகார் மாநிலத்தின், சுபால் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம், இன்று (22.03.24) இடிந்து விழுந்து ஒருவர் பலி, 9 பேர் காயமடைந்துள்ளது அதிர்ச்சடைய செய்துள்ளது.
இந்நிலையில், இவ்வாறு நடக்கும் இடிமானங்கள் புதிதல்ல என்பதும் மக்கள் சிந்திக்கக்கூடிய ஒரு செய்தியாக மாறியிக்கிறது. கடந்த ஆண்டு, சுமார் 20 நாடுகளைக் கூட்டி, G20 மாநாடு நடத்திய ஒன்றிய பா.ஜ.க, அப்போது டெல்லியில் அவசர அவசரமாக கட்டி திறந்த சுரங்கத்திற்கும் இதே நிலை தான்.
சுமார் ரூ. 773 கோடி செலவில் கட்டப்பட்ட, இச்சுரங்கம், டெல்லியில் அனைத்து முனைகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது என பெறுமையுடன் திறந்து வைத்தார் பிரதமர் மோடி. எனினும், சுரங்கம் திறக்கப்பட்ட ஓர் ஆண்டிற்குள்ளேயே, புழத்தில் இருக்க தகுதியற்று போனது அச்சுரங்கம்.
நீர் தேக்கங்கள், கழிவுகளின் கசிவு, கட்டுமானத்தில் விரிசல் ஆகியவை அச்சுரங்கம் புழக்கத்தில் இல்லாததற்கு காரணங்களாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை போன்றே, சரியான் திட்டமில்லாமல் கட்ட தொடங்கிய சில்க்யாரா சுரங்கம் கட்டிகொண்டிருக்கும் போதே, நிலச்சரிவிற்குள்ளானது. இதனால், தொழிலாளர்கள் உள்ளுக்குள் சிக்கிக்கொண்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வகை சுரங்கங்களை கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் பெற்றவர்கள் அனைவரும், தேர்தல் பத்திரத்தின் வழி பா.ஜ.க.விற்கு பெரும் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.
அதன்படி, நவயுகா பொறியியல் எனப்படுகிற குழுமம், சில்க்யாரா சுரங்கம் கட்டுவதற்கான ஒப்பந்தம் பெறுவதற்காக, சுமார் ரூ. 55 கோடியை தேர்தல் பத்திரத்தின் வழி, பா.ஜ.க.விற்கு வழங்கியுள்ளது என SBI வெளியிட்டுள்ள தகவலின் படி உறுதியாகியுள்ளது.
இவ்வாறு, பா.ஜ.க கட்சியின் நிதியை கூட்ட, மக்களின் உயிர் சார்ந்த, அரசு திட்டங்களில் ஏற்படுத்தியிருக்கிற மாற்றங்களுக்கு, தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.