மத்திய பிரதேசத்தில் மோகன் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்த பல கேள்விகள் உள்ள நிலையில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக குஜராத் அறியப்படுகிறது. பெண்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் பாஜக மிகவும் அசாதாரணமாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவம் அதே போல் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் 38 வயதில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் சம்பவத்தன்று அந்த பெண், வெளியே சென்று சாலை வழியாக நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அதில் ஒரு தனக்கு தெரிந்தவர் என்பதால், அந்த பெண்ணும் பேசியுள்ளார்.
தொடர்ந்து வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். அதில் ஒருவர் தனக்கு நன்றாக தெரியும் என்பதால் இந்த பெண்ணும் பைக்கில் சென்றுள்ளார். ஆனால் அந்த அந்த நபரோ வீட்டுக்கு செல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கே வைத்து அந்த பெண்ணை தாக்கி, இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட பெண் இந்த அவமானத்தை தாங்க முடியாமல் வீட்டுக்கு சென்று, பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர், அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கே அவருக்கு அளிக்கப்பட்டதோடு போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் தாசில்தார் விசாரிக்கையில், இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் புகாராக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட 2 பேரில், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!