இந்தியா

ஞானவாபி மசூதியில் அனுமதி, பழனி கோவிலில் மறுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடம்!

ஞானவாபி மசூதிக்குள் இந்து மத வழிபாட்டை அனுமதித்துள்ளது வாரணாசி நீதிமன்றம். பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதோர் நுழைய தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

ஞானவாபி மசூதியில் அனுமதி, பழனி கோவிலில் மறுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று கூறி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த வரிசையில், வாரணாசி பகுதியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதிப் பகுதிதான் கிருஷ்ணர் பிறந்த இடம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது வாரணாசி நீதிமன்றம். மேலும், 6 நாட்களுக்குள் மசூதியின் அடித்தளத்தில் இந்துமத வழிபாடு செய்யவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த 6 நாள் கால வரையறை என்பது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு போடப்பட்ட விதை. அவர்கள் நினைத்ததை செய்வதை குறிக்கோளாக வைத்து நகர்கின்றனர்,” என சொல்லியிருக்கிறார் உ.பி முன்னாள் முதல்வர், அகிலேஷ் யாதவ்.

ஒரு நீதிபதி ஓய்வு பெறவிருக்கிறார் என்றால், அவர் இந்துத்துவ அரசியலுக்கு ஆதரவான தீர்ப்பையே வழங்குவார் என்பதை யாரும் விளக்கி நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேவையில்லை. அதே வகையில், ஓய்வு பெற சில நாட்களே உள்ள நிலையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார் மாவட்ட நீதிபதி அஜய கிருஷ்ணா.

நீதிமன்ற விசாரணைக்கு பின் மசூதியின் செயலாளர் யாசின் Wire ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், “இனியும் இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்பதில் எங்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை,” என தெரிவித்துள்ளார்.

எவ்வித சான்றும் இல்லை. அனைத்தும் பொய்கள். எனினும், இந்துத்துவவாதிகளுக்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்,” என்றும் குற்றஞ்சாட்டினார்.

இந்த சிக்கல் ஒருபுறம் இருக்க, தற்போது பழனி கோவிலுக்குள் மற்ற மதத்தினர் நுழையத் தடை விதித்து, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

ஞானவாபி மசூதியில் அனுமதி, பழனி கோவிலில் மறுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடம்!

மதத்தை பின்பற்றுகிறார்களோ இல்லையோ, ஆனால் அனைவரும் தேவாலயங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மசூதிகளிலும் இதே நிலவரம்தான். ஆனால் கோவில்களுக்கு மட்டும் இது நடப்பதில்லை. சட்டப்பூர்வமாகவே அங்கு அனுமதி மறுக்கப்பட இந்த தீர்ப்பு உதவுகிறது. துயரம் என்னவெனில், இந்துக்களிலேயே ஒரு சாராரை (தலித்கள், பெண்கள்) அனுமதிக்காமலும் பல கோவில்கள் இருக்கின்றன.

நீதிபதி எஸ்.ஸ்ரீமதி வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

“கோவில் நுழைவு அனுமதி சட்டம், அறநிலையத் துறை சட்டத்தில் இந்து கோவில்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய அனுமதியில்லை என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கோவில்களில் பட்டியலில் துணைக் கோயில்கள், மண்டபங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு செல்ல இந்துக்கள் மட்டுமே உரிமைப்பட்டவர்கள்.

”கோவில் நுழைவு அனுமதிச் சட்டம், இந்துக்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் கூறுகிறது. எனவே கோவில் நுழைவு அனுமதிச் சட்டம் மற்றும் அறநிலையத் துறை சட்டங்களை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இந்து மதத்துடன் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது.

”இந்துக்கள் அல்லாதவர்கள் யாராவது கோவிலுக்கு வந்தால் ’இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோவில் மரபுகளை பின்பற்றுவதாகவும்’ அவர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.”

இஸ்லாமிய, கிறித்துவ மதங்களில் இருக்கும் சகிப்புத்தன்மை கூட பார்ப்பனிய பீடம் தலைமை தாங்கும் இந்து மதத்தில் இல்லையென்பதற்கு இன்னொரு பெரும் உதாரணம் இருக்கிறது:

இந்துக்களின் ஒரு சாராராக இருக்கும் பெண்கள், தலித்கள், போன்றோரை பல இந்து கோவில்களில் அனுமதிப்பது கூட இல்லை.

banner

Related Stories

Related Stories