இந்தியா

”மிரட்டுவதெல்லாம் பழங்கால ஸ்க்ரிப்ட்” : அமலாக்கத்துறை சம்மனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி!

மிரட்டுவதெல்லாம் பழங்கால ஸ்க்ரிப்ட் அமலாக்கத்துறை சம்மனுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

”மிரட்டுவதெல்லாம் பழங்கால ஸ்க்ரிப்ட்”  : அமலாக்கத்துறை சம்மனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அப்படி கடந்த காலங்களில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், முற்போக்குவாதி நரேந்திர தபோல்கர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூரத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பினர். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ். பா.ஜ.க அரசின் ஒவ்வொரு திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக இந்தி மொழி திணிப்பு, ராகுல் காந்தி இடைநீக்கம், புதிய நாடாளுமன்ற கட்டம் என பா.ஜ.கவின் அனைத்து நடவடிக்கைகளையும் கேள்விக்கு உட்படுத்தி வருகிறார்.

அதோடு பிரதமர் நரேந்திர மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டும் விமர்சித்து வருகிறார். இப்படி இவர் விமர்சிப்பதால் சக நடிகர்கள் தன்னுடன் பேசவே மறுக்கிறார்கள் என்ற தனது வேதனையைக் கூட வெளிப்படுத்தியுள்ளார். அதேநேரம் இவரின் கருத்துக்குப் பொதுமக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

இதனால் கடுப்பான ஒன்றிய பா.ஜ.க அரசு பிரணவ் ஜூவல்லர்ஸ் பண மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜைச் சிக்க வைக்கப் பார்க்கிறது. நகைக்கடை விளம்பரத்தில் நடித்த ஒரே காரத்திற்காக அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், மிரட்டுவதெல்லாம் பழங்கால ஸ்க்ரிப்ட் அமலாக்கத்துறை சம்மனுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பீடை என பொருள்படும் ‘பனாதி’ என்ற வார்த்தையால் மோடியைக் குறிப்பிட்டு மிரட்டுவதெல்லாம் பழங்கால ஸ்க்ரிப்ட். வேறு ஏதேனும் முயற்சி செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories