இந்தியா

கட்சி அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்!

ராஜஸ்தானில் உட்கட்சி பூசல் விவகாரத்தில் உச்சக்கட்டமாக, கட்சி அலுவலகத்தை பாஜகவினரே சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இதனால் பா.ஜ.க அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

இதையடுத்து, தற்போது எம்.பிகளாக இருக்கும் சிலரை பா.ஜ.க இந்த தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இது கட்சிக்குள் உட்கட்சி மோதலை உருவாக்கியுள்ளது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்களின் பெயர்கள் இடம் பெறாததால் அவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர்.

ஜோத்வாரா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க எம்பி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத முன்னாள் அமைச்சர் ராஜ்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் அவருக்குக் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கட்சி அலுவலகத்தை சூறையாடிய பாஜக தொண்டர்கள்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டம்!

மேலும், கட்சி தலைமைக்கு எதிராக பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சித்தோர்கரில் உள்ள மாநிலத் தலைவர் சிபி ஜோஷியின் வீடு மீது கற்களை வீசி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதேபோல் ராஜ்சமந்தில் உள்ள கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய பாஜகவினர், அங்குள்ள பொருட்களை தீ வைத்துக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்தைச் சேதப்படுத்தியது தொடர்பாக 4 பேரை பாஜக தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories