அரசியல்

’மரியாதை முக்கியம்’- பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு!

மத்திய பிரதேச தேர்தலில் மீண்டும் போட்டியிட சீட் கிடைக்காததால் முன்னாள் அமைச்சர் ருஸ்தம் சிங் பா.ஜ.க கட்சியிலிருந்து விலகினார்.

’மரியாதை முக்கியம்’- பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலத்தில் நவ.17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பா.ஜ.க இம்முறை எப்படியாகவது ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்காமல் மறுத்துள்ளது. இது கட்சிக்குள் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் வேலையில்லா திண்டாட்டம், பெண்கள் மீது தாக்குதல், சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு இவை எல்லாம் பா.ஜ.க ஆட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறிவருகின்றனர்.

’மரியாதை முக்கியம்’- பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் : பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு!

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ருஸ்தம் சிங் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் அவரது மகன் ரகுராஜ் காஞ்சனாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தில், "பா.ஜ.க கட்சி என்னை அழைத்தால் நான் காவல் கண்காணிப்பாளர் பதவியை விட்டு விட்டு கட்சியில் சேர்ந்தேன். கட்சிக்காக உழைத்தேன். மொரோனா தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றேன். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டேன்.

இந்த முறையும் மொரோனா தொகுதி மக்கள் என்னைத்தான் விரும்பினர். ஆனால் சீட் கொடுக்கவில்லை. இதனால்தான் மக்கள் விருப்பப்படி நான் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்த்து அங்கு மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மூத்த தலைவர் பா.ஜ.கவில் இருந்து விலகியுள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    banner

    Related Stories

    Related Stories