இந்தியா

'சந்திரயான் 3' : நிலவில் பதியாத இந்திய தேசிய சின்னம்.. காரணம் என்ன ? விளக்கிய இஸ்ரோ தலைவர் !

நிலவில் இந்திய தேசிய சின்னம் பதியாதது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார்.

'சந்திரயான் 3' : நிலவில் பதியாத இந்திய தேசிய சின்னம்.. காரணம் என்ன ? விளக்கிய இஸ்ரோ தலைவர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

'சந்திரயான் 3' : நிலவில் பதியாத இந்திய தேசிய சின்னம்.. காரணம் என்ன ? விளக்கிய இஸ்ரோ தலைவர் !

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கி அதன் ரோவர் நிலவில் தனது ஆய்வுப் பணியை தொடங்கியது.

பின்னர் நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்தபின்னர் நிலவில் சூரியன் மறைந்ததால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன. நிலவில் மீண்டும் சூரியன் உதயமாகிய பின்னர் இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி நேற்று விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய ஒளி மீண்­டும் வந்த நிலையில், ரோவர் மற்­றும் விக்­ரம் லேண்­டர் ஆகி­ய­வற்­று­டன் தொடர்பை மீண்­டும் ஏற்­ப­டுத்த இந்­திய விண்­வெளி ஆய்வு நிறு­வ­ன­மான இஸ்ரோ முயற்­சி­களை மேற்­கொண்­ட­தில், இது­வரை எந்த சிக்­ன­லும் கிடைக்­கப் பெற­வில்லை என்­றும், அதனை தொடர்பு கொள்­வ­தற்­கான முயற்­சி­கள் தொடர்ந்து நடை­பெ­றும் என்­றும் இஸ்ரோ தெரிவித்தது.எனினும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் கூறப்பட்டது.

'சந்திரயான் 3' : நிலவில் பதியாத இந்திய தேசிய சின்னம்.. காரணம் என்ன ? விளக்கிய இஸ்ரோ தலைவர் !

இந்த நிலையில் இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கமளித்துள்ளார். லேண்டர், ரோவர் குறித்து பற்றி கூறிய அவர், லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் இல்லை. நாம் காத்திருக்கவேண்டும். பகல் பொழுதில் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும். ஆகவே அதனிடமிருந்து சிக்னல் வராது எனக் கூறமுடியாது.

அதே போல நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. ரோவர் நிலவில் செல்லும்போது . அந்த முத்திரைகள் நிலவில் தெளிவாக பதியவில்லை. இதற்கு அந்த பகுதியில் இருந்த நிலவின் மண்ணின் தன்மையே காரணம். அந்த பகுதியில் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக இருந்துள்ளது"எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories